03-29-2005, 11:25 AM
<b> மீண்டும் நிலநடுக்கம்: இந்தோனிசியாவில் ஆயிரக்கணக்கில் உயிர்பலி?
நேற்று நள்ளிரவு இந்தோனிசியாவை மையமாகக் கொண்டு மாபெரும் நிலநடுக்கம் இந்தோனிசியாவின் சுமத்ரா தீவிலுள்ள Nias தீவினை நிலைகுலைய வைத்தது. இச்சம்பவத்தில் குறைந்தது 2000 பேர் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
8.7 ரிக்டர் அளவிலான இந்நிலநடுக்கம் நேற்று நள்ளிரவு இந்தோனிசியா, மலேசியா,தாய்லாந்து, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கடுமையாக உணரப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட மூன்று மணிநேரத்திற்கெல்லாம் சுனாமி பேரலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டிசம்பர் 26 ஆம் தேதிக்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுவென கடலோரமக்கள் தெரிவித்தனர்.
இந்தோனிசியாவில் Nias தீவில் குறைந்தது 2000 பேராவது இறந்திருக்கக் கூடும் என இந்தோனிசிய துணை அதிபர் Jusuf Kalla தெரிவித்தார். 80% கட்டிடங்கள் முழுமையாக அங்கு சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Gunungsitoli நகரத்தில் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்துவிட்டன. அக்கட்டிட இடிபாடுகளிலிருந்து இறந்தவர்களின் உடல்களை எடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே மின்சாரத்தடை ஏற்பட்டதால் நிலைமை அங்கு மோசமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இருளினாலும், தொடர்ந்து நிலஅதிர்வுகள் ஏற்பட்டு கட்டிடங்கள் சரிந்து விழுவதினாலும் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
Gunungsitoli நகரம் தற்போது இறந்த நகரமாக ஆகிவிட்டது. நிலைமை பயங்கரமாக உள்ளது என அந்நகரத்தின் மேயர் Agus Mendrofa தெரிவித்தார்.
இந்நிலநடுக்கம் 9 ரிக்டர் அளவிலானது எனவும் மிக மோசமான ஒன்றாக இந்நிலநடுக்கம் இருக்கக்கூடும் எனவும் அமெரிக்க புவியியல் துறை தெரிவித்துள்ளது.
[b]மலேசியாவில்.... </b>
மலேசியா முழுக்கப் பரவலாக இந்நிலநடுக்கம் உணரப்பட்டது. கோலாலம்பூர், ஈப்போ, பினாங்கு, கிள்ளான் பள்ளத்தாக்கு,லங்காவி,கெடா போன்ற இடங்களில் கடுமையாக உணரப்பட்டது.
வீடுகளை விட்டு அச்சத்தால் ஓடி வந்த மக்கள் தெருக்களில் கூடியிருந்தனர். சுமார் 90 வினாடிகள் இந்நிலநடுக்கம் நீடித்ததால், பயங்கர பீதி ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
வணக்கம் மலேசியா

...............