03-29-2005, 09:19 AM
[size=16]சுனாமி தாக்க வாய்ப்புள்ளது: ஆஸ்திரேலிய வானிலை மையம்
சிட்னி:
இந்தோனஷியாவின் மேற்குப் பகுதியில் கடலுக்கடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தையடுத்து நடுக்கடலில் 25 செ.மீ. உயரமான சிறிய சுனாமி அலைகள் உருவானதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசிபிக் கடலில் உள்ள இந்த மையத்தின் சுனாமியைக் கண்டறியும் கருவிகளில் இந்த சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட சுமத்ரா தீவுப் பகுதியில் இருந்து 1,100 கி.மீ. தூரத்தில் நடுக்கடலில் இந்த சுனாமி எச்சரிக்கைக் கருவிகள் உள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் 25 செ.மீ. அளவுக்கு சுனாமி அலைகள் இந்தக் கருவிகளை தொட்டுச் சென்றன. கடந்த டிசம்பரில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தையடுத்து இந்தக் கருவிகளில் 33 செ.மீ. அளவுக்கு சுனாமி அலைகள் பதிவாயின. இவை கடற்கரைகளை அடைந்தபோது 10 மீட்டர் வரை உயர்ந்தன.
ஆனால், இம்முறை 25 செ.மீ. உயரமான சுனாமி அலைகள் நடுக்கடலில் உருவானாலும் கடற்கரைகளை சுனாமி அலைகள் இதுவரை தாக்கவில்லை. ஆனால், அவை தாக்கக் கூடும் என ஆஸ்திரேலிய வானிலை ஆராய்ச்சி மையம் தொடர்ந்து எச்சரித்துள்ளது.
பிற நாடுகளும், வானிலை ஆராய்ச்சி மையங்களும் சுனாமி தாக்குதலுக்கு வாய்ப்பில்லை என கூறிவிட்ட நிலையில் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது