03-29-2005, 02:02 AM
<span style='color:red'><b>சுனாமி அலையாக மாறும்
அபாயம் குறைவாக உள்ளது</b>
<img src='http://www.yarl.com/forum/files/sunami.see.ajeevan.jpg' border='0' alt='user posted image'>
[size=15]
<b>பிந்திய செய்திகளின்படி பாரிய பேரலைகள்
கடற்கரைப் பகுதிகளைத் தாக்கினாலும்
இது சுனாமி அலையாக மாறும் அபாயம்
குறைவாக உள்ளதாக பிறிதொரு செய்தி தெரிவிக்கின்றது.</b>
காவலூர் கவிதன்
திங்கட்கிழமை 28 மார்ச் 2005 23:38 ஈழம்
சுமாத்ரா கடற்பரப்பில் எழுந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தையடுத்து, இன்னும் ஒரு சில மணி நேரத்தில் சிறீலங்கா கடற்பரப்பில் மீண்டும் பாரிய சுனாமி தாக்கம் ஏற்படலாம் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
8.2 றிக்ரர் அளவில் எழுந்ததாக நம்பப்படும் நிலநடுக்கத்தையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து இந்தியா கடற்பரப்புகளில் தற்போது கடற்கொந்தளிப்பு எழுந்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு மணிகளில் இலங்கை கடற்பரப்பை இந்த ஆழிப்பேரலைகள் தாக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இதற்கிடையில் தற்போது இலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்களின்படி வடக்கு கிழக்கில், விடுதலைப் புலிகள், பாரிய ஒலிபெருக்கிகள் மூலம் மக்களை எழுந்து கடலுக்கு அப்பால் செல்லுமாறு அவசர அறிவித்தல்கள் விடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
அமெரிக்க வானிலை அவதான நிலையம், சர்வதேச வானிலை மையங்களைத் தொடர்பு கொண்டு இந்த எச்சரிக்கைத் தகவலைப் பரிமாறியுள்ளதாகவும், எனினும் அப்பகுதியில் நள்ளிரவாக இருப்பதால் மக்களுக்கு தகவல் இதுவரை முழுமையாக சென்றடையவில்லை என்றே தாம் நம்புவதாக அந்நிலைய அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
யாழ் புதினம் நிருபரின் தகவலின்படி, தற்போது பருத்தித்துறை, முல்லைத்தீவு மற்றும் வடக்கு கிழக்கு கடற்கரைப் பகுதிகளிலும் அம்பாறை கல்முனை உட்பட திருகோணமலை கடற்கரைப் பகுதிகளிலும் வாகனம் மூலமாக புனர்வாழ்வுக்கழக தொண்டர்கள் விடுதலைப் புலிகளின் அனைத்து உறுப்பினர்களும் இந்த தகவலை அறிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கொழும்பில் தற்போது தகவல்கள் பரவ ஆரம்பித்துள்ளதாக எமது கொழும்பு நிருபர் தெரிவித்துள்ளார்.
பிந்திய செய்திகளின்படி பாரிய பேரலைகள் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கினாலும் இது சுனாமி அலையாக மாறும் அபாயம் குறைவாக உள்ளதாக பிறிதொரு செய்தி தெரிவிக்கின்றது.
</span>