Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குயிலின்பன் இராணுவத்தால் தாக்கப்பட்டார்
#6
குயிலின்பன் தாக்குதல் தொடர்பாக இளந்திரையன் விளக்கம்

விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் உட்பட தமது போராளிகள் விசேட அதிரடிப் படையினரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இளந்திரையன் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

அந்த விளக்கம் வருமாறு:

இன்று பிற்பகல் 2.00 மணியளவில் போராளி ஏகலைவனை சிறீலங்கா அதிரடிப் படையினரும் பொலிசாரும் சேர்ந்து மண்டானை நலன்புரி நிலையத்தில் வைத்து கைது செய்து காரணமின்றி தாக்கியுள்ளார்கள்.

அது பற்றி விசாரிப்பதற்கு அம்பாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் குயிலின்பன் உட்பட 9 போராளிகளைää காஞ்சுரன்குடா படை முகாமிலிருந்து வந்த மேலதிக படையும்ää நலன்புரி நிலையத்தில் முகாமிட்டிருந்த படையினரும் சேரத்து மோசமாக தாக்கியுள்ளனர்.

படுகாயமடைந்த குயிலின்பன் உட்பட 2 போராளிகள் மோசமாக தாக்கப்பட்ட நிலையில் அவசர சிகிச்சைக்காக தற்போது கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். இந்த தாக்குதலுக்கு துப்பாக்கிää மரப்பலகைகள்ää பொல்லுத் தடிகள் தயார் நிலையில் ஏற்கனவே வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதனைத்தவிர காஞ்சுரன்குடா முகாம் வழியாகப் பயணம் செய்த மேலும் 3 போராளிகளும் விசேட அதிரடிப் படையினரால் தாக்கப்பட்டுள்ளார்கள். இந்த முகாமில் வைத்துத்தான் கடந்த 2002ம் ஆண்டு 7 பொது மக்கள் துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இன்றைய சம்பவத்தைக் கண்டித்து குறிப்பிட்ட நலன்புரி நிலையத்திலுள்ள மக்கள் தமது முகாமிலுள்ள படைகள் வெளியேற வேண்டும் எனக் கோரி போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் வெளியேறும்வரை தற்போது அங்குள்ள போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரை வெளியேற விட மாட்டோம் என்றும் வலியுறுத்தி தெரிவித்துள்ளார்கள்.

ஏற்கனவே விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்ட ஏகலைவன் என்ற போராளி பற்றி போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் ஊடாக படையினரிடம் கேட்டபோது எந்த தகவலையும் அவர்கள் தரவில்லை. இந்தப் போராளிää தங்கள் வசமில்லை என படையினர் மறுத்து வருவதால் அது பற்றிய பாரிய அச்சுறுத்தல் நிலவுகின்றது.

சர்வதேச சமூகம் இப்போதாவது சிங்களவர்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் படையினரும் தமிழ் மக்களை எப்படிப் பார்க்கின்றார்கள் என்பதையும் தமிழ் மக்கள் அந்த படையினரை எப்படிப் பார்க்கின்றார்கள் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.

Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 03-28-2005, 02:47 PM
[No subject] - by eelapirean - 03-28-2005, 04:19 PM
[No subject] - by வியாசன் - 03-28-2005, 04:49 PM
[No subject] - by hari - 03-28-2005, 05:01 PM
[No subject] - by Mathan - 03-28-2005, 08:53 PM
[No subject] - by hari - 03-29-2005, 06:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)