09-09-2003, 03:04 PM
வரதட்சணை கொடுமையில் தொழிலதிபர் மனைவி,
மகள் சாவு மாமனார்,மாமியார் மற்றும் கணவனுக்கு சிறை
தண்டனை
ஊட்டி, செப்.9_
வரதட்சணை கொடுமையால் ஊட்டி தொழிலதிபரின் மனைவி தன் மகளுடன் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, அவரது கணவன் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
ஊட்டியையடுத்துள்ள கிளப் ரோடு பகுதியில் வசித்து வரும் தொழிலதிபர் நஹர்லால் பாப்னா. இவரது மனைவி பெயர் நிர்மலா. இவர்களது இரண்டாவது மகன் பெயர் மகேந்தர்(வயது_30).
மகேந்தருக்கும், சென்னையை சேர்ந்த ரேகா(வயது_25) என்பவருக்கும் கடந்த 94_ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு பூஜா(வயது_4) என்ற பெண் குழந்தை உள்ளது.
திருமணம் ஆன புதிதிலிருந்தே வரதட்சணை அதிகம் கேட்டு அவரது கணவன் குடும்பத்தார் கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2000_ம் ஆண்டு வாக்கில் ரூ.2 லட்சம் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி, கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து, ரேகா தனது குழந்தை பூஜாவை தனது மடியில் கட்டியவாறு, கெரொசின் ஊற்றி பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, ஊட்டி நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, ஊட்டி செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த ஊட்டி செசன்சு கோர்ட்டு நீதிபதி பி.சண்முகம், மேற்குறிப்பிட்ட நஹர்லால் பாப்னா, நிர்மலா, மகேந்தர் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

[b]Nalayiny Thamaraichselvan