Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மூளைக்கட்டி (Brain Tumour)
#1
<span style='font-size:25pt;line-height:100%'>மூளைக்கட்டி (Brain Tumour)</span>

<b>பகுதி 1</b>

மூளைக்கட்டிகள் அல்லது கண்டல் ஒரு விதமான வளர்ச்சியாகும். இவை மூளையிலிருந்தே தொடங்கலாம் அல்லது உடம்பின் வேறொரு பாகத்தின் புற்றுநோயிலிருந்தும் பரவும் தன்மை கொண்டன.

இவை இருவகையாக பிரிக்கப்படுகின்றன:

(i)Malignant (Cancerous) - கொடிய புற்றுநோய் வகை
(ii)Benign - தீதிலி வகை


தீதிலி வகையானது மிகவும் மெதுவாக வளர்ந்து மூளையில் அமுக்கத்தை ஏற்படுத்தும். இது நேரடியாக மூளையின் திசுக்களை(Tissues) பாதிக்கமாட்டாது.

கொடிய புற்றுநோய் வகையானது மிகவும் அபூர்வமாகக் காணப்படும் ஒன்றாகும். மூளையின் கட்டமைப்பு(structure) நூற்றிற்கும் மேற்பட்ட உயிர் அணுக்களால்(cells) அமையப்பெற்றது. இவற்றில் ஏதாவது ஓர் உயிரணு கொடியதாக மாற்றம் அடையக்கூடும். இவ்வகையான
மாற்றங்கள் நோயாளியின் பரம்பரை வழியாக அல்லது சூழலினால் உயிரணுக்களின் மரபுக் கட்டமைப்பில்(genetic structure) ஏற்படக்கூடிய அல்லது உருவாகும் மாறுதல்களே ஆகும். இவை குறைபாடுள்ள அல்லது பழுதடைந்த(defective) உயிரணுக்கள் உடலில் பெருக்கம் அடைவதற்கு காரணிகளாக இருக்கின்றன. ஆகவே, இதனால் தான் கட்டிகள் தோன்றி கொடிய வகையான புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன. எனினும், இவ்வகையான கட்டிகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அரிதானவை என்பது குறிப்பிடத்தக்கது.

மூளைக்கட்டிகள் ஏற்படுவதற்கான மூலகாரணம்: உடலின் வேறு பாகங்களில் அல்லது உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய், மூளைக்கும் பரவுதலேயாகும். உதாரணமாக, முலையில்(breast) அல்லது நுரையீரலில்(Lungs) ஏற்படக்கூடிய புற்றுநோய் எலும்பு மற்றும் ஈரல்(Liver) என்பனவற்றிற்குப் பரவும் தன்மை வாய்ந்தது. ஏனெனில், அதனின் உயிரணுக்களுக்கு சிறந்த குருதி ஓட்டம் இருப்பதே முக்கிய காரணமாக அமைகிறது.

மூளைக்கட்டிகள் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதற்குக் காரணம், கருவுருவின் (foetus) நரம்புக்கட்டமைப்பிலும் அதன் வளர்ச்சியிலும் ஏற்படக்கூடிய அசாதாரணத்துவமே ஆகும்.


(மேலும் தொடரும்.......)
Reply


Messages In This Thread
மூளைக்கட்டி (Brain Tumour) - by Minnal - 09-09-2003, 01:29 PM
[No subject] - by sOliyAn - 09-10-2003, 01:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)