03-28-2005, 02:18 AM
kirubans Wrote:கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் அம்பிகாபதி என்பவரால் இயற்றப்பட்ட அம்பிகாபதி கோவை அம்பிகாபதி, அமராவதி கதையை சொல்லுவதாக இருக்கலாம்.
http://www.tamilar.org/tamil-literaturechrono.asp
அம்பிகாபதி எனும் படம் தியாகராஜ பாகவதர் நடித்து 1937இல் வெளிவந்து சக்கை போட்டதாம். அதனால் அம்பிகாபதி கதை பிரபல்யம் அடந்திருக்கலாம்.
கதையின்படி அம்பிகாபதி கம்பரின் மகன், அமராவதி இளவரசி. இருவருக்கும் காதல். அரசனுக்கு விருப்பமில்லை. கட்டிக்கொடுப்பதற்கு நிபந்தனை வைக்கிறார். குறிப்பிட்ட தொகை (100?) பாடல்களை தொடர்ந்து இயற்றிப்பாடுவது என்பதுதான் நிபந்தனை.
அமராவதி ஒவ்வொரு பாடல் முடிவிலும் ஒவ்வொரு பூக்களாக எறிகிறாள். இதுதான் பாடல்களை எண்ணுவதற்குப் பாவிக்கப்பட்ட முறை. அமராவதி பிழையாக ஒன்றைக் கூட எறிந்ததால், அம்பிகாபதி ஒரு பாடல் குறையப் பாடி முடிக்க வேண்டி வந்து விட்டது. மரண தண்டனை கிடைக்கிறது. காதல் காவியமாகிவிட்டது.
படத்தைப் பார்க்கவும் இல்லை, புராணத்தைப் படிக்கவுமில்ல்லை, எல்லாம் கேள்விப்பட்ட சங்கதிதான்.
அப்ப கம்பன் மகன் கதையை... கிட்டத்தட்ட 300 - 200 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு அம்பிகாபதி எழுதினாரோ...???! அப்படி என்றால் ஏன் இன்னொரு இளங்கோ இருந்திருக்க முடியாது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

