Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருவள்ளுவர் தமிழ் எழுதி
#1
புதிய தமிழ் எழுதி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்ட எந்த எழுத்துருவை பயன்படுத்தினாலும் எந்த வேறுபாடும் இன்றி தட்டெழுத முடியும். திருவள்ளுவர் தமிழ் எழுதி எனப்படும் இந்த எழுத்தோலையை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய தமிழ் எழுத்துரு ஒன்றும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இன்று எல்லோரும் ஆங்கில் எழுத்துருவுக்கு வடிவமைக்கபட்ட கீபோட்டை பயன்படுத்துகிறோம். ஆனால் தமிழ்எழுத்துருவுக்கு மாற்றுவதற்கான எழுத்துருக்களை அனைத்து இடங்களிலும் ( எல்லா கீகளிலும்) பயன்படுத்துவதால் எமக்கு தேவையான அத்தியாவசிய குறியீடுகளை இடுவதற்கு மீண்டும் ஆங்கில எழுத்துருவுக்கு மாற்றியே அதனை செய்கிறோம்.


ஆனால் வேறு எந்த குறியீடுகளையும் பயன்படுத்தாமல் ஆங்கில எழுத்துருக்கள் உள்ள 26 கீகளை மட்டும் பயன்படுத்தி (அதிலும் மீதமாக 08 இடங்கள் உள்ளன.) இப்புதிய எழுத்துரு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் தனியாக புதிய எழுத்துருவை நீங்கள் தரவிறக்கதேவையில்லை. உங்கள் கணனியில் இருக்கின்ற லதா எழுத்துருவை பயன்படுத்தியே இதனை தட்டெழுதமுடியும்.

திருவள்ளுவர் தமிழ் எழுதி பற்றியும் தமிழம் எழுத்துரு பற்றியும் உங்கள் கருத்துக்களை அறியதாருங்கள். தற்போது இவ் எழுதியை யாரும் பயன்படுத்தவேண்டாம். அனைவரின் கருத்துக்களை அறிந்து சரிபிழைகளை மிகவிரைவில் திருத்தம் செய்து அனைவரும் பயன்படுத்தக்கூடிய எளிய செயல் நிரலை விரைவில் தருகிறேன்.

திருவள்ளுவர் தமிழ் எழுதிக்கு செல்ல
Reply


Messages In This Thread
திருவள்ளுவர் தமிழ் எழுதி - by thamilvanan - 03-27-2005, 08:09 PM
[No subject] - by kavithan - 03-28-2005, 03:27 AM
[No subject] - by thamilvanan - 03-28-2005, 04:56 AM
[No subject] - by thamilvanan - 03-28-2005, 05:22 AM
[No subject] - by kavithan - 04-01-2005, 01:30 AM
[No subject] - by thamilvanan - 04-01-2005, 07:41 PM
[No subject] - by thamilvanan - 04-02-2005, 12:38 PM
[No subject] - by Niththila - 04-02-2005, 03:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)