03-27-2005, 07:22 PM
இளங்கோ சங்கம் மருவிய காலத்தில் (கி.பி. 100 -600) இருந்தவர். அவர் சேரலாதன் என்ற மன்னனின் மகனாகப் பிறந்தார். இவருடைய சகோதரன் சேரன் செங்குட்டுவன் ஆவான்.
இளங்கோ, செங்குட்டுவன் மற்றும் புலவர் கூலவாணிகன் சாத்தனார் (மணிமேகலையைப் பாடியவர்) ஆகியோர் இயற்கையைத் தரிசிக்க மதுரைப் பக்கம் உள்ள பெரியாற்றுப் பக்கமாகச் சென்ற வேளை, அருகிலுள்ள கிராமத்தில் உலவிய ஒரு கதையைச் செவிமடுத்தனர். ஒற்றை முலையுடைய ஒரு பெண் வேங்கை மரமொன்றின் கீழ் 15 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் இருந்த இறந்த கதைதான் அது. ஊர் மக்கள் அப் பெண்ணை பத்தினித் தெய்வம் என்று வழிபட்டனர். கதை கேட்டு உருகிய செங்குட்டுவன், கூலவாணிகன் சாத்தனாரை மேலதிக தகவல்களைப் பெற்றுவருமாறு கேட்டான்.
கூலவாணிகனும் மேலதிக தகவல்களைப் பெற்றுவந்து அப்பெண்ணின் பெயர் கண்ணகி என்று சொல்லி அவளின் துன்பக் கதையை செங்குட்டுவனுக்கும், இளங்கோவுக்கும் கூறினான். மன்னன் சேரலாதனுக்கும் இது தெரிய வரவே, அவர் கண்ணகியின் கதையை வைத்து காவியம் படைக்கும்படி இளங்கோவைக் கேட்டார். இப்படித்தான் சிலப்பதிகாரம் என்ற பெரும் புராணம் உருவானது.

<b> . .</b>