09-09-2003, 07:30 AM
கருக்கொண்ட மேகம் மழையாகித்தான் கரைய வேண்டும். .
வணக்கம்
நளாயினி அக்கா, சந்திரவதனா அக்காவின் கருத்துக்கள் என்னுடன் நன்றாகவே ஒத்துப்போகின்றன. கவிதை என்பது உணர்வுகளின் வெளிப்பாடு. அது எப்போது தோன்றும் எப்போது மறையும் என்று தெரிவதில்லை. பாலைவன மண்ணில் மழை எப்போது வரும் என்று வானிலையாளர்களாலேயே புரிந்துகொள்ள முடியாததுபோலத்தான் எனது கவிதைகளும். அவை எப்போது தோன்றும் எப்போது தவிக்கவைக்கும் என சொல்லமுடியவில்லை. சிலநேரங்களில் பயணம் செய்யும்போதுகூடத் தோன்றும் அந்த வேளைகளில் எழுதிக்கொள்ள சந்தர்ப்பம் அரிது. அவை அப்படியே அனாதைகளாகிவிடும். பின்பு நினைவில் இருத்தி எடுத்;துக்கொள்ள கடினம். உறங்கும்போது நடக்கும்போது வெட்கம்விட்டு சொல்லிக்கொள்கின்றேன் குளியலறையில்கூட கவிதை தோன்றிக்கொள்ளும். பல சந்தர்ப்பங்களில் தோன்றும் கவிதைகளை எழுத சந்தர்ப்பம் கிடைக்காவிடின் கைத்தொலைபேசியில் (அதுதானே எப்போதும் அருகில் இருக்கின்றது.) ஒலிவடிவில் சேமித்து வைத்துக்கொள்வேன். நேரம் கிடைக்கும்போது அவற்றை எழுதிக்கொள்வதுண்டு.
நு}று கவிதைகளிற்கு மேலாக எழுதிவைத்துள்ளேன். அவற்றில் ஒருசிலதான் மனதை இன்றுவரை தொடுகின்றன. பல வருந்தி அழைத்தவை. பல அவையாகவே பிரசவமானவை. வருந்தி அழைப்பதற்கும் வலிய வருபவைக்கும் வித்தியாசங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை வார்த்தைகளில் உணரமுடியும். கற்பனைகள் அதிகமாயின் அவை வருந்தி அழைத்தவை. சுடும் உணர்வுடன் தெரிபவை அழகுறத்திகழ்பவை வாசிக்கும்போது மனதோடு சேர்பவையெல்லாம் வலிய வந்தவை. அவைகள்தான் வார்த்தைகள் அவற்றை இங்கு நான் பலருடைக கவிதைகளில் கண்ணுற்றேன்.
துளிகளாக வீழ்பவன் எனக்கே கவிதைகள் பிரசவத்தின் வேதனை தெரியும்போது சோவென பெய்யும் நளாயினி அக்கா, சந்திரவதனா அக்கா, நண்பர் த.சாPஸ், குரவிகள் மற்றும் இதர நண்பர்களின் கவிதைகளின் பிரசவவேதனை எப்படி இருக்கும். நினைத்துப்பார்க்க முடியவில்லை.

[b] ?