03-27-2005, 01:48 PM
குருவிகள் சொல்வதுதான் சரி. பண்பாடு பண்பாடு என்று சொல்லிக்கொண்டு எம்மை நாமே மடமைக்குள் புகுத்துகின்றோமேயொழிய அதைவிட்டு வெளிவர முயற்சிக்கவில்லை. இதிகாசம் ஒன்று எழுதப்படும்போது அதிலே பலதரப்பட்ட விடயங்கள் எழுதப்படத்தான் செய்யும். அதிலே போய் ஏன் பாலியலை மட்டும் தூக்கிப்பிடித்துக்கொண்டு கூத்தாட வேண்டும். காதலில் சரிபாதியிருப்பது காமம்தான். காதலில் காமம் இல்லையாயின் ஏன் காதலர்கள் திருமண பந்தத்தையும் அதன்பின்னான கணவன் மனைவி என்ற உறவையும் விரும்புகின்றார்கள். இந்தவகையில் இராமன் மீது சீதை கொண்ட காதலிலும் பாதியளவுக்கு காமம் இருந்திருக்கும். ஆகையால் இராமன்மீது கொண்ட காதலால் அவன் வில்லை உடைத்ததைக் கேள்வியுற்ற சீதையின் உள்ளம் பரவசப்பட்டதுபோல் அவளது உடலும் பரவசப்பட்டிருக்கும். இதைச்சொன்ன கம்பனை ஏன் வம்பன் என்று சொல்ல வேண்டும்.

