Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அனுபவம்.
#3
உண்மைதான் நளாயினி.
அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி.

வைரமுத்து மாதிரியோ அல்லது வேறு பெரிய கவிஞர்கள் போலவோ ஒரு உல்லாச விடுதியில் போயிருந்து கவிதை எழுதுவது என்பது எனக்குச் சரிவராது.

கவிதை மட்டுமென்றில்லை. எதை எழுதுவதாயினும் அதற்கொரு நேரம் வர வேண்டும். நாமாக எம்மை வருத்தி ஏதாவது இப்போது கண்டிப்பாக எழுத வேண்டும் என்று எழுதினால் நாம் ஒரு உல்லாச விடுதியில்-அமைதியான சூழ்நிலையில் இருந்தாலும் கூட அது ஒரு போதும் சரியாக அமையாது.
தானாக எம் சிந்தனையில் உதிக்கும் போது பிரசவிப்பவையே சிறந்த படைப்புக்களாகின்றன.

சில சமயங்களில் நிறைய நேரமிருக்கும். எந்தத் தொந்தரவுகளும் இல்லாமலிருக்கும். ஆனால் எழுதுவதற்கான உந்துதல் எம் மனதில் இருக்காது.

பல சமயங்களில் எழுதுகோலைத் தூக்கவே நேரம் கிடைக்காது. ஆனால் ஏதேதோ எல்லாம் அழகாக மனதில் எழுதப் படும். அது மீண்டும் நேரம் கிடைக்கும் போது நினைவில் வந்தால் கவிதையாகவோ கதையாகவோ உருப் பெறும்.

உங்களைப் போலவோ பரணியைப் போலவோ கவிதை கவிதையாக நான் எழுதிக் கொட்டியது கிடையாது.
எப்போதாவது ஏதாவது மனதில் தோன்றும்.
அதனால் எண்ணிச் சொல்லக் கூடிய ஒரு சில கவிதைகளே என்னவை. அவை கூடக் கவிதைகள்தானா என்பது எனக்குத் தெரியாது.

நானாக வில்லங்கப் பட்டு கவிதை எழுத வேண்டுமென நினைத்து சில சமயங்களில் எழுதியிருக்கிறேன். தற்போது அவைகளை வாசித்துப் பார்த்தால் அவை கவிதைகளே இல்லை என்று என்னாலேயே தீர்மானிக்க முடிகிறது.
Nadpudan
Chandravathanaa
Reply


Messages In This Thread
அனுபவம். - by nalayiny - 09-07-2003, 06:29 PM
Re: அனுபவம். - by Mullai - 09-08-2003, 05:34 PM
[No subject] - by Chandravathanaa - 09-09-2003, 05:12 AM
[No subject] - by nalayiny - 09-09-2003, 06:44 AM
[No subject] - by Paranee - 09-09-2003, 07:30 AM
[No subject] - by nalayiny - 09-09-2003, 07:54 AM
[No subject] - by Paranee - 09-09-2003, 07:59 AM
[No subject] - by kuruvikal - 09-09-2003, 09:16 AM
[No subject] - by Chandravathanaa - 09-09-2003, 11:35 AM
[No subject] - by இளைஞன் - 09-09-2003, 11:55 AM
[No subject] - by Chandravathanaa - 09-11-2003, 05:52 AM
[No subject] - by இளைஞன் - 09-11-2003, 11:02 PM
[No subject] - by kuruvikal - 09-12-2003, 09:36 AM
[No subject] - by இளைஞன் - 09-27-2003, 08:50 AM
[No subject] - by Paranee - 09-27-2003, 09:26 AM
[No subject] - by sOliyAn - 09-27-2003, 12:27 PM
[No subject] - by Alai - 09-30-2003, 12:03 AM
[No subject] - by Alai - 09-30-2003, 09:50 PM
[No subject] - by sOliyAn - 09-30-2003, 09:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)