Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
NTT வன்னியிலிருந்து ஐரோப்பாவுக்கு புதிய தொலைக்காட்சி
#11
<span style='font-size:22pt;line-height:100%'>வன்னியிலிருந்து ஐரோப்பாவுக்கு புதிய தொலைக்காட்சி

தமிழீழ தேசியத் தொலைக்காட்சி என்ற பெயரில் விடுதலைப்புலிகள் சார்பான புதிய தமிழ் தொலைக்காட்சி ஒன்று இன்று முதல் ஆரம்பமாவதாக அந்த நிலையத்தின் இயக்குனர் கருணாகரன் என்பவர் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை இரவு இலங்கை நேரம் 11.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த தொலைக்காட்சி சேவை முதலில் அரை மணித்தியாலத்துக்கு ஒலிபரப்பாகும் என்றும் செய்திகளுக்கே தற்போதைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முதலில் ஐரோப்பிய நாடுகளுக்கு வன்னியில் இருந்து செய்மதி மூலம் ஒளிபரப்பப்படும் இந்த சேவை பின்னர் படிப்படியாக அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதியில் இருந்து தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

ஆயினும் யாழ் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது, அங்கு அவர்கள் உள்ளுர் மட்டத்தில் ஒரு தொலைக்காட்சி சேவையை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

</span>

thanks: BBC tamil
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 03-26-2005, 05:02 PM
[No subject] - by kuruvikal - 03-26-2005, 06:23 PM
[No subject] - by AJeevan - 03-26-2005, 06:30 PM
[No subject] - by Mathan - 03-26-2005, 07:11 PM
[No subject] - by KULAKADDAN - 03-26-2005, 07:17 PM
[No subject] - by vasisutha - 03-26-2005, 08:29 PM
[No subject] - by eelapirean - 03-26-2005, 08:56 PM
[No subject] - by tamilini - 03-26-2005, 09:57 PM
[No subject] - by வியாசன் - 03-26-2005, 10:02 PM
வன்னியிலிருந்து ஐரோப்பாவுக்கு புதிய தொலைக்காட்சி - by AJeevan - 03-27-2005, 01:25 AM
[No subject] - by glad - 03-27-2005, 10:07 AM
[No subject] - by hari - 03-27-2005, 04:25 PM
[No subject] - by adithadi - 03-27-2005, 05:03 PM
[No subject] - by ¸ÅâÁ¡ý - 03-27-2005, 05:06 PM
[No subject] - by Mathan - 04-07-2005, 09:01 PM
[No subject] - by hari - 04-08-2005, 05:02 AM
[No subject] - by iruvizhi - 04-08-2005, 02:12 PM
[No subject] - by Sriramanan - 04-08-2005, 08:46 PM
[No subject] - by selvanNL - 11-17-2005, 02:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)