03-25-2005, 01:35 AM
"தமிழில் புதுச்சொல்லாக்கம" என்ற தலைப்பில் நடக்கும் உரையாடலில ( http://www.yarl.com/forum/viewtopic.php?t=...=4364&highlight ) பங்கேற்க விருப்பம், ஆனால் இன்னும் அதற்குத் தேவையான புண்ணியம் சேரவில்லை. ஆனபடியால் இந்தக் களத்தில் எழுதுகிறேன். அது தகாது என்றால் முன்கூட்டியே மன்னிக்கவும் என்று கேட்டுக் கொள்கிறேன். எந்தக் களத்தில் இப்படியான உரையாடல்களில் புது உறுப்பினர்கள் எழுதலாம் என்று யாராவது சொல்லுங்கள்.
"ஓரேஞ்" என்பது இந்தியாவிலிருந்து வந்த சொல்லு என்றுதான் கருதப் படுகிறது: சமஸ்கிருதத்தில் "நாரங்க", அரபு ("நாரஞ்"), பழைய வெனிஸ் நகரப் மொழி ("நாரன்சியா"), இத்தாலிய மொழி ("ஆரன்சியா") மூலமாக மற்ற ஐரோப்பியப் பாஷைகளுக்கு வந்து சேர்ந்தது.தமிழ் மூலம் "நாறு" (பழந்தமிழில் "வாசனை") என்றிருக்கலாம் என்று சிலர் கருதுகிண்ரனர். "நாரத்தங்காய்"க்கும் (சிங்கள "நாரங்") இதில் தொடர்பிருக்கலாம்.
ஹரி ஏற்கெனவே தமிழிலிருந்து வந்த வேறு சில சொற்களைத் தந்தார். இதோ இன்னும் சில:
<ul>- இஞ்சி வேர் -> ginger (ஆங்கிலம்), ingwer (யேர்மன்),
- கூலி -> coolie
- பச்சிலை -> patchouli
- கண்டு (உதாரணமாக "கற்கண்டு") -> candy
<ul>
சொல்மூலவியல் (etymology) ஒரு சுவாரசியமான துறை. மண்ணத்தோண்டிப் புதை பொருளாராய்ச்சி செய்வது போலச் சொற்களைத் தோண்டினாலும் வரலாற்றைப் பற்றி ஏதாவது அறியக் கிடைக்கலாம்.
<span style='font-size:16pt;line-height:100%'>முன்னைய தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது- இராவணன்</span>