Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழர்கள் vs தமிழ் பேசும் பாப்பணர்கள்
#1
தமிழ்பேசும் பாப்பண்ர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக பேசும் அவர்களுக்கு நீங்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். தயவு செய்து எனது ஆக்கத்தை நீக்க வேண்டாம்.

இணைப்பு நீக்கப்பட்டுள்ளது - மதன்

.
தயவுசெய்து ஈழ்த்தமிழரின் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள். கீழே உள்ள கவிதையை இல்லை இல்லை தீயை உணர்ந்த பிறகாவது அவர்களது நிலையை, போராட்டத்தை கேலி செய்வதை நிருத்துங்கள். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும். ஒருவரை ஒருவர் மன்னித்து "தமிழ்-தமிழர்" என்னும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுவோம். இந்தியனான நான் இதை தமிழில் எழுதுவதற்கு வழிவகுத்தவன் ஒரு ஈழத் தமிழன்.

இந்த கவிதை கற்பனை அல்ல. உயிரை பிழிந்து உருவக்கபட்ட ஓவியம்.

அன்பு நெஞ்சரே!
நேற்று உம் நாட்டின்(இந்தி-இந்திய)மிலேச்ச இராணுவம்
எம் பெண்களின் மொட்டவிழ்த்து
கும்பல் வல்லுறுவு செய்ததும்
நாம் எமதுரிமைக்காய் போட்டகோலத்தில்
சிறுநீரடித்ததும் மலங்கழித்ததும்
ஒரு நொடியிலுமக்கு மறந்துபோச்சோ?

தமிழரின் மார்புகளின் மீது
'செயின் புளோக்' ஏற்றப்பட்டு
குருதிபிழிந்து விழிகள் வெளிக்கிளம்ப கொல்ப்பட்டதை...

இன்றும் குலை நடுங்கும் கோரமடா!இதை
உன் தேசத்தவன் விரும்பிச் செய்தான்
நீ பார்த்திருக்கமாட்டாய்,
உனக்கிது பழக்கப்படாதது
உன் பாரததேசத்து பாசிசத் தலைவன்
உன்குப் பெரிதாகலாம் அல்லது நீ காலில் விழுந்து நமஸ்தே கோரலாம்
அதுக்கு?...

எனக்கோ,
என் மகளின் கற்பும் அவள் உயிரும்
அதை விடப்பெரிதாகும்!
ஈழமெங்கும் மனித வதை -கொலை
செய்வித்த உன் தேசத்து இராஜீவ் உனக்கு உசத்திதாம்

தன்வினையாற் தான் மாண்ட கதை, இராஜீவ் கதை!

என் தேசமகளுக்கு
சுக்கிலம் பருக்கிய சீக்கியச் தணிக்கை
சும்மா விடச்சொல்கிறாயா?

நீ தப்புப் பண்ணுகிறாய்!
ஆத்தாளின் அம்மணத்தில்
சுயதிருப்தியின்பங் கொள்ளாதே

என் மகள் முதல்முதலாய்ப்போட்ட தாவணி
உடல் கிழிந்த குருதியினால் கறை பட்டதும்
இதயச் சிப்பிக்குள் சேர்த்து வைத்த அவள் கனவெல்லாம்
ஒரு நொடியில் கருகியது உனக்குத் தெரியுமா??

நீ இராமாயணத்தாலும் மகாபாரதத்தாலும் பயற்றப்பட்டவன்
நாமோ சிங்கள அடக்குமுறைகளினாலும்
அவர்கள் அள்ளிப்போட்ட குண்டுகளாலும் பயிற்றப்பட்டவர்கள்

எமக்குத் தெரியும்
எமது நோய்கு மருந்திட
உனது நாட்டிற்கென்ன வேலை என் வீட்டில்???

என்
ஆத்தாளின் மார்பகங்களை அள்ளிப்புணர்ந்தும்
கடித்தும் குதறியும்
உன் தேசத்து இராணுவம் களிப்புற்றபோது
நாமென்ன மாலையிட்டானப்பி வைப்போம்????

இன்றும்
இதே மாதிரிக் காஷ்மீரை கற்பழிக்கும்
உன் தேசத்துப் படையை
நீ உச்சிமோந்து வீரனென சினிமாப் போடுபவன்

உனக்கெங்கே தேச மானம் புரியும்?????

என் தேச மகனுடன்
நான் மல்லுக்கட்டுவது போரின் கொடிய அனர்த்தம் கண்டு,

நீயோ தப்புத் தப்பாய் கூட்டிக் கழிக்கிறாய்!
நீ கருதும் கருத்துக்குச் சார்பாய் என்னெழுத்து இருந்திட்டால்
'ஒருபைத்தியத்தின் பிதற்றலதுவெனப் பிரகடனஞ் செய்கிறேன்'

உன் வெறிக்கு
என் வீட்டார் தலை வேண்டுமோ??????

அன்றைய இராவணன் காலமல்லயிது
உன் கனவு பலிப்பதற்கு!

நீ புரட்டிப்போடும் வித்தையில்
ஈராயிரமாண்டாய்க் கெட்டித்தனங் காட்டகிறாய்
நாமென்ன விட்டேந்திகளா உன் வித்தையைப் புரியாதிருக்க???????

எம்மோடு விளையாடாதே
நாம் உன் தேசத்தால் பிற முதுகில் குத்துவேண்டியவர்கள்!

இப்போது சொல்
ஊரான் உன் ஆத்தாளின் உடலுக்குள்
போத்தல் புகுத்தியும் குண்டு வைத்துமதைக் கிழிக்கும்போது
நீ கீதையா படிப்பாய்????????

நீ தேர்ந்த வியாபாரி!
ஊர் சந்து பொந்தெல்லாம் புகுந்து
உன் கடையை விரிப்பதில் நீ வித்தகன்தான்!

-ப.வி.ஸ்ரீரங்கன்
23.03.2005
ஜேர்மனி.

http://srisagajan.blogspot.com/2005/03/blo...og-post_23.html
Reply


Messages In This Thread
ஈழத்தமிழர்கள் vs தமிழ் பேசும் பாப்பணர்கள் - by adithadi - 03-24-2005, 05:55 AM
[No subject] - by eelapirean - 03-24-2005, 09:01 AM
excellent poem - by cadman2924 - 03-24-2005, 09:18 AM
[No subject] - by Nitharsan - 03-24-2005, 10:46 AM
[No subject] - by இளைஞன் - 03-24-2005, 11:30 AM
[No subject] - by Nitharsan - 03-24-2005, 11:38 AM
[No subject] - by THAVAM - 03-24-2005, 11:48 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)