03-23-2005, 08:13 PM
Quote:திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன அது ?திரிசங்கு என்ற மன்னன் இந்திரலோகப் பதவியை அடைவதற்காக (இந்திரனுடைய இடத்தைப் பிடிப்பதற்காக) தவம் செய்து அல்லது ஒரு முனிவரிடம் தவம் வாங்கி (எது என்று மறந்து விட்டேன்) தேவலோகத்துக்குப் போகும் வழியில் இந்திரன் தனது பதவி பறிபோகப் போகிறது என்று திரிசங்கை காலால் உதைந்து விட்டான். இதனால் திரிசங்கு தலைகீழாக உலகத்திந்கு திரும்பவும் வர முனிவர் உலகத்திற்கும் தேவலோகத்திற்கும் இடையில் மன்னனை நிறுத்தி அவ்விடத்திலேயே திரிசங்குவுக்காக ஒரு உலகத்தை உருவாக்கி அதற்கு திரிசங்கை தலைவனாக்கினார். இதிலிருந்து வந்ததுதான் திரிசங்கு சொர்க்கம் என்ற உவமானம். இதன் அர்த்தம் இங்கையுமில்லை அங்கையுமில்லை என்பது.
!

