06-20-2003, 03:06 PM
என் மீது உன்னகமும் முகமும்
நேற்றய பொழுதொன்றில்
நான் உன்னை இழந்து போனேன்
என்னில் உன்னை விதைப்பதற்காய்
பலமுறை முயன்றும்
தோற்றுப்போனேன்
நீண்ட இரவுப் பொழுதொன்றில்
ஆந்தை அலறும் வேளை
ஆட்காட்டிக்குருவி அவலமாய்க் கத்தி
அமைதியைக் கலைக்கும்
மனிதம் எப்பவோ நடந்து முடிந்த பாதையில்
உன் சிறிய பாதங்களை
வெள்ளை மணலில் பதித்திருப்பாய்
தடம் பதித்து மீண்டும் வருவாயென்று
நினைவுகளைச் சுமந்து எட்டி நடந்திருப்பாய்
நினைவுகள் வழித்தடங்களாக
கரிய இருளொன்றுக்குள்
உந்தனைத் திணித்திருப்பாய்
கருமை படர்ந்த இரவுகள் தான்
உன் இறுதிப்பயண மாயிற்று
இறுதியாய் கானககுடிசை வந்தும் போனாய்
அங்கங்களையும் முகங்களையும் இழந்துபோன
நகரொன்றுக்குள் நீ
இறுதியாய் சரிந்து போனாய்
என்னில் உன் பயணத்தடமிருக்கும்
என் மனதில் நீ
இன்னும் கனமாய் படர்ந்துள்ளாய்
-சத்திய மலரவன்
நேற்றய பொழுதொன்றில்
நான் உன்னை இழந்து போனேன்
என்னில் உன்னை விதைப்பதற்காய்
பலமுறை முயன்றும்
தோற்றுப்போனேன்
நீண்ட இரவுப் பொழுதொன்றில்
ஆந்தை அலறும் வேளை
ஆட்காட்டிக்குருவி அவலமாய்க் கத்தி
அமைதியைக் கலைக்கும்
மனிதம் எப்பவோ நடந்து முடிந்த பாதையில்
உன் சிறிய பாதங்களை
வெள்ளை மணலில் பதித்திருப்பாய்
தடம் பதித்து மீண்டும் வருவாயென்று
நினைவுகளைச் சுமந்து எட்டி நடந்திருப்பாய்
நினைவுகள் வழித்தடங்களாக
கரிய இருளொன்றுக்குள்
உந்தனைத் திணித்திருப்பாய்
கருமை படர்ந்த இரவுகள் தான்
உன் இறுதிப்பயண மாயிற்று
இறுதியாய் கானககுடிசை வந்தும் போனாய்
அங்கங்களையும் முகங்களையும் இழந்துபோன
நகரொன்றுக்குள் நீ
இறுதியாய் சரிந்து போனாய்
என்னில் உன் பயணத்தடமிருக்கும்
என் மனதில் நீ
இன்னும் கனமாய் படர்ந்துள்ளாய்
-சத்திய மலரவன்

