03-22-2005, 04:28 AM
பிரான்சிலும் இதே பிரச்சனை இருக்கிறது நிதர்சன்! அநேகமான பெற்றோர்கள் கூட்டங்களுக்கு வந்தாலும் கூட மொழிப்பிரச்சனையால் அவர்களுக்கு ஆசிரியர்களிடம் உரையாட முடிவதில்லை. ஆகவே பிள்ளையின் பிரச்சனையை அதே பிள்ளையை மொழி பெயர்ப்பாளராக வைத்தே கேட்க வேண்டியிருக்கிறது. இங்கே பிள்ளையின் நேர்மையைப் பொறுத்ததே மிகுதி!!
மொழி தெரிந்த வேறு தமிழர்கள் அவ்விடத்தில் இருந்தாலும் கூட அவர்களிடம் கேட்டால் ஏதோ குறைந்து விடும் போல போய் விடுவார்கள். இதனால் பாதிக்கப்படுவது பிள்ளையின் இன்றைய கல்வி எதிர்காலம் மாத்திரம் இல்லை. பெற்றோரின் எதிர்கால நிம்மதியும் தான். அவரவர் இருக்கும் நாட்டின் மொழியைக் கொஞ்சமாவது தெரிந்திருக்காததினால் பிள்ளைகள் தங்களிடையே என்ன பேசுகின்றார்கள்? பெற்றோரை எப்படித் திட்டுகின்றார்கள்? கேலி செய்கின்றார்கள் என்பது கூடப்புரியாமல் பல பெற்றோர் தங்கள் பிள்ளை பிரெஞ்சு மொழியில் நன்றாகப் பேசுகிறது; பிள்ளைகளுக்குத் தமிழ் தெரியாது என்று கூறிப் பெருமைப் படுவதைப் பார்க்கும் போது உண்மையிலேயே மனதுக்குப் பெரும் கவலையாயய் இருக்கும். மற்றும் படி நீங்கள் கூறியது போல் இங்கு பாடசாலைகளில் மொழி பெயர்ப்புக்கு அரசாங்கம் மொழிபெயர்ப்பாளரை வரவழைப்பது பற்றி நான் கேள்விப்படவில்லை.

!!