03-22-2005, 12:32 AM
தீவுச்சேனை மோதலில் இருவர் பலி
இலங்கையின் பொலுன்நறுவை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான தீவுச்சேனையில் இன்று காலை இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் இருவர் கொல்லப்பட்டு மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
அங்கிருந்த கருணா அணியினர் என்று கூறப்படுபவர்கள் மீது தாக்குதல் நடத்திய அணியைச் சேர்ந்தவர்களே கொல்லப்பட்டதாகவும், காயமடைந்தவர்களில் மங்கள மாஸ்டர் என்பவர் உட்பட கருணா அணியைச் சேர்ந்த மூவரும் மற்றும் ஒரு 5 வயதுக் குழந்தையும் அடங்கும் என்றும் இலங்கை இராணுவத் தரப்பு கூறுகின்றது.
இந்த சம்பவத்தின் போது தற்செயலாக காயமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த இந்தக் குழந்தை பொலன்நறுவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து இராணுவம் மற்றும் பொலிஸிடம் இருந்து முழுமையான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இருந்தபோதிலும் காலை 6.20 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், அங்கு விரைந்த இராணுவத்தினர் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து இரண்டு சடலங்களை மீட்டதாகவும் இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா கூறியுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று வெலிக்கந்தை பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக புலிகள் தரப்பில் இருந்து எதுவும் இதுவரை கூறப்படவில்லை.
BBC தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>