Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிழக்கில் கருணா குழு
#9
கருணா குழுவின் முகாம் பற்றிய மேலதிக தகவல்களை அம்பலப்படுத்துகிறார் புத்திக வீரசிங்க

பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்திலுள்ள தீவுச்சேனை கிராமத்தில் கருணா குழுவின் முகாமில் அவரது சகாக்கள் சுமார் 60 பேர் வரை இருப்பதாகவும்ää அதற்கு மேலதிகமாக ஆயுதப்பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் சிறுவர்களும் இருப்பதாகவும் ஹரபொல கிராமவாசிகளின் தகவல்கள் மூலம் அறியக் கூடியதாக இருந்தது என 'சண்டே லீடர்" பத்திரிகையின் புகைப்படப் பிடிப்பாளர் புத்திக வீரசிங்க தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட முகாம் தொடர்பான செய்தியை வெளியிட்ட 'சண்டே லீடர்" பத்திரிகையின் செய்தியாளர் குழுவில் இடம்பெற்றிருந்த புத்திக வீரசிங்க இதுபற்றி மேலும் கூறுகையில்

மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதியில் செவனப்பிட்டிய சந்தியிலிருந்து வடக்குப் பக்கமாக பயணம் செய்யும்போது மூன்று கிலோ மீற்றர் தொலைவில் முத்துக்கல் கிராமம் உள்ளது. இந்த முகாமிலுள்ள இராணுவ சோதனைச்சாவடியில் எமது சகல உடமைகளும் கடுமையாக சோதனைக்குள்ளாக்கப்பட்டது.

கடமையிலிருந்த இராணுவ சிப்பாய்களிடம் கருணா குழுவின் முகாம் இருப்பது பற்றிக் கேட்டபோது இதுபற்றி தமக்கு தெரியாது என்றனர்.

இந்த கிராமம் ஒரு முஸ்லிம் கிராமமாகும்.

முத்துக்கல்லிலிருந்து உள்ளே 100 மீற்றர் தொலைவில் தீவுச்சேனை கிராமம் உள்ளது. அங்கு ஆயுதம் தாங்கிய இளைஞரொருவர் பதுங்குக்குழிக்குள் இருந்ததை காணமுடிந்தது. அவர் கருணா குழுவைச் சேர்ந்தவர் எனவும் அறிய முடிந்தது.

வாகனத்தை நிறுத்தி நாங்கள் பத்திரிகையாளர்கள். மங்களம் மாஸ்டரை சந்திக்க முடியுமா என அவரிடம் கேட்டபோது

மங்களம் மாஸ்டர் இல்லை என்று அவர் கூறாமல் காத்திருங்கள் என்று பதிலளித்து விட்டு மற்றுமொருவர் மூலம் இதுபற்றிய தகவல் அனுப்பினார்.

சைக்கிளில் சென்று அரை மணி நேரத்தில் திரும்பிய அந்நபர் இப்போது அவர் இல்லை. இன்னொரு தடவை முற்பகலில் வந்தால் சந்திக்க முடியும் என்றார்.

கருணா குழுவினரை வெளியேறக்கோரி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தான் அந்த முகாமிற்கு பொறுப்பானவர் மங்களம் மாஸ்டர் என்பதை ஹரபொல கிராமத்து மக்கள் மூலம் அறிய முடிந்தது.

அண்மையில் இந்த கிராமத்தில் இடம்பெற்ற இரண்டு இளைஞர்களின் படுகொலைக்கும் அவர்தான் பொறுப்பு என்றும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by வியாசன் - 03-20-2005, 06:17 PM
[No subject] - by kirubans - 03-20-2005, 08:06 PM
[No subject] - by வியாசன் - 03-20-2005, 09:57 PM
[No subject] - by MEERA - 03-21-2005, 02:34 AM
[No subject] - by kirubans - 03-21-2005, 03:16 AM
[No subject] - by Mathan - 03-21-2005, 11:35 AM
[No subject] - by Mathan - 03-21-2005, 11:41 AM
[No subject] - by Mathan - 03-21-2005, 11:57 AM
[No subject] - by Mathan - 03-21-2005, 12:32 PM
[No subject] - by vasisutha - 03-21-2005, 10:18 PM
[No subject] - by Mathan - 03-22-2005, 12:32 AM
[No subject] - by Mathan - 03-22-2005, 12:44 AM
[No subject] - by tamilini - 03-22-2005, 12:48 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)