03-21-2005, 06:16 AM
வெலிக்கந்தையில் கருணா குழு மீது தாக்குதல்
பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசம் தீவுச்சேனை கிராமத்தில் முகாமிட்டிருக்கும் கருணா குழு மீது இன்று காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை அப்பகுதியிலிருந்து பரவலான வெடிச்சத்தங்கள் கேட்டதாக அப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கி;ன்றன.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள ஆரம்ப தகவல்களின் படி கருணா குழுவுக்குப் பொறுப்பாளரான மங்களம் மாஸ்டர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் உள்ளிருந்தே மேற்கொள்ளப்பட்;டதாக ஒரு தகவலும்ää மற்றுமொரு தகவல் அந்தப் பகுதியில் நடமாடியவர்கள் மீது பதுங்கியிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவுதவும் தெரிவிக்கப்படுகின்றது.
அப்பிரதேச மக்களின் தகவலின் படி துப்பாக்கிச் சூடுகள் மக்கள் குடியிருப்புக்களிலும் விழுந்துள்ளன. இதன் காரணமாக சிறுமியொருவரும் காயமடைந்துள்ளார்.
இந்;த சம்பவத்தையடுத்து தற்போது மேலதிக இராணுவத்தினரும் பொலிசாரும் அங்கு விரைந்துள்ளார்கள். பதட்டமான சூழ்நிலை அங்கு காணப்படுகின்றது.
அப்பகுதியில் கருணா குழுவின் முகாம் எதுவும் இல்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயா ரட்னாயக்க நேற்றைய தினம் மறுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சுட்டது புதினம்

TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS