03-21-2005, 03:16 AM
<b>'அரசு கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா அணியின் முகாம்'</b>
இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பலிருந்து பிரிந்து சென்று செயற்படும் கருணா அணியின் முகாமொன்று அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் இருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில வாரப் பத்திரிகையான "சண்டே லீடர்" இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்திலுள்ள தீவுச்சேனையில் இந்த முகாம் அமைந்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ள இப் பத்திரிகை, கருணா அணியினரின் காவலரண் ஒன்றின் புகைப் படத்தையும் வெளியிட்டுள்ளது.
மங்கள மாஸ்டர் என்பவர் தலைமையில் இந்த முகாம் கடந்த 7 மாதங்களாக அங்கு இயங்கி வருகின்றது என்றும், அவரை சந்திக்க முயற்சி எடுத்த போதிலும் அனுமதியின்றி ஊடகவியலாளர்களை சந்திக்க முடியாது என்று மற்றுமொரு கருணா அணி உறுப்பினர் மூலம் தகவல் அனுப்பியிருந்தார் என்றும் அந்த பத்திரிகை கூறுகின்றது.
கருணா அணியின் முகாமில் சுமார் 60 பேர் வரை இருக்கலாம் என தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியிட்டுள்ள அந்த பத்திரிகை, முன்னணி காவலரண் பகுதியில் ஆயுதம் தரித்த 12 வயது என்று கூறப்படும் சிறுவனொருவனின் படத்தையும் வெளியிட்டுள்ளது.
<b>ராணுவம் மறுப்பு</b>
இந்த முகாம் தொடர்பாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயா ரத்னாயக்காவிடம் கேட்டபோது, இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள எந்தவொரு பகுதியிலும் கருணா அணியினரின் முகாம்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு, இந்த செய்தியை நிராகரித்துள்ளார்.
இந்தப் பகுதியில் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா அணியினர் இடையில் மோதல் நடந்துவருகிறது, ஆதலால் இப்பகுதிக்குள் அவர்கள் வந்துபோவது நடக்கத்தான் செய்கிறது. ஆனால் முகாம் எதுவும் இல்லை என்பதை தங்களால் உறுதிபடக் கூறமுடியும் என்று தயா ரத்னாயக்கா தெரிவித்துள்ளார்.
நன்றி. BBC தமிழோசை

<b> . .</b>