03-21-2005, 03:05 AM
ஆண் என்ற ரீதியில் எனது அபிப்பிராயங்கள்
<b>* அறிவைப் பெருக்கி சமூகத்துக்கு உதவ </b>
அறிவை வளர்க்கலாம்தான். என்றாலும் உயர் கல்வி கற்றுத்தான் அறிவு வரும் என்று நான் நம்பவில்லை. தமிழர்கள் மத்தியில் பட்டம் பெற்றவர்கள் எல்லோரும் அறிவாளிகள், அவர்கள் சொல்லுவது எல்லாம் சரி என்ற பிழையான கருத்துருவாக்கம் உள்ளது.
சமூகத்திற்கு உதவ வேண்டும் என்று உயர் கல்வி கற்போர் மிக அரிது. தாயகத்தில் சமூகம் என்பது ஓரளவேனும் தற்போதும் உள்ளது. புலத்தில் சமூகம் என்று பொதுவான ஒரு கட்டமைப்பை நான் காணவில்லை. ஒன்றில் தனது ஊராருடன் தங்களை அடையாளப் படுத்துவார்கள், அல்லது தமது வேலைத்தள, கல்வியிட, விளையாட்டு நண்பர்களுடன் தங்களை அடையாளப்படுத்துவார்கள்.
இருக்கும் சமூகத்திற்கு ஏதாவது சேவை செய்ய யாராவது முயல்கிறார்களா? பணத்தைச் சுருட்டவே பலர் சமூக சேவை செய்கிறார்கள். இதில் உயர்கல்வி கற்றவர்கள், கல்லாதோர் என்ற பேதமில்லை.
<b>* வளமான வாழ்வு தேட மட்டும் </b>
படிக்கும்போது ஏன் படிக்கிறோம், அல்லது பெற்றோர் பிள்ளைகளை படி என்று சொல்லும்போது ஏன் சொல்லுகிறார்கள் என்று சிந்தியுங்கள். படிக்காவிட்டால் பிற்கால வாழ்வு சிறப்பாக இராது, கஸ்டப்படுவாய், பிறர் உன்னை ஏமாற்றிவிடுவார்கள், பெற்றோரை வயதான காலத்தில் நன்றாகப் பார்க்க வேண்டும் என்று சொல்லத்தான் கேட்கிறோம்.
எனவே வளமான வாழ்வுக்குக் கல்வி அவசியம். உயர்கல்வி என்றால் மேலும் வளமாக்கலாம்.
<b>* திருமணத்தின் போது சீதனம் வாங்க </b>
பரீட்சை வரும்போது யாராவது பரீட்சையில் நன்றாகச் செய்து சித்தி எய்தினால் 50 லட்சம் வாங்கலாம் என்று எண்ணிப் படிக்கிறார்களா?
சீதனம் வாங்க வேண்டும் எவ்வளவு வாங்க வேண்டும் என்பதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டு யாரும் கல்வி கற்பதில்லை (அப்படி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் கடைசி மட்டும் சித்தியடைய மாட்டார்கள்). படித்து முடித்தபின்னரே பலர் திருமணத்தை பற்றி ,கூடவே சீதனத்தைப் பற்றியும், சிந்திக்கிறார்கள்.
எனவே சீதனத்தை வாங்கவேண்டும் என்பது முதற்காரணியாக இருக்காது.
சீதனம் வாங்குவதைவிட தன்னளவு படித்த, தன்னளவு சம்பாதிக்கக் கூடிய பெண்ணை ஆண் தெரிவு செய்தால், நீண்டகால நோக்கில் நன்மை பயக்கும். என்றாலும் நம்வர்கள் அதைச் செய்ய முன்வரமாட்டர்கள். காரணம் பலவாக இருக்கும். சிலவேளை, சீதனம் வாங்கா விட்டால், தன்னை வியாதிக்காறன் என்று எண்ணிவிடுவார்களோ என்ற பயம், சிலவேளை படித்த பெண் என்றால் சொல்வழி கேட்கமாட்டாள் என்ற பயம் (படித்த பெண் என்றால் கொஞ்ச விஷயங்கள் தெரியத்தானே செய்யும்), சிலவேளை பெண்களை அடக்கி ஆள வேண்டும் என்ற நோய், சிலவேளை அவசரம் பெருந்தொகை தேவைப்படலாம் (கல்யாண வயதி ஒரு தங்கை, படித்ததால் வந்த கடன் சுமை) இப்படிப் பல காரணங்கள்.
<b>* பெருமைக்கும் புகழுக்கும் </b>
பெருமையும் புகழும் யாருக்குத்தான் கசக்காது. இவை உயர்கல்வி கற்றால் மட்டும் கிடைக்காது. மனித நேயமும், சமூகத்திற்கு உதவும் குணமும், அல்லது மனித குலத்திற்கே நீண்டகாலத்திற்கு உதவக்கூடிய எதையாவது கண்டுபிடிக்கக் கூடிய திறமையும் இருக்க வேண்டும். அல்லாவிடில் திருமண அழைப்பிதழில் மட்டும்தான் தான் படித்ததை பறைசாற்ற முடியும். இது குறுகியகால சந்தோஷத்தை மாத்திரம்தான் தரும்.

<b> . .</b>