Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்தேகம் எதிலும் சந்தேகம்....
#1
<span style='font-size:25pt;line-height:100%'>சந்தேகம் எதிலும் சந்தேகம்....</span>

மனநல டாக்டர் ராமநாதனைப் பார்க்க கிருஷ்ணா நுழைகிறார்.


<b>கிருஷ்ணா - வணக்கம் டாக்டர்

[b]டாக்டர் - வணக்கம் உட்காருங்கோ. உங்களுக்கு என்ன பிரச்சனையா...?</b>

<b>கிருஷ்ணா - என்னோட பெயர் சுந்தர கணபதிப்பிள்ளை கிருஷ்ணகுமார்</b>

<b>டாக்டர் - ஓ... அதுதான் பிரச்சனையா சுருக்கமாக கிருஷ் என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதானே..?</b>
<b>
கிருஷ்ணா - மிகவும் நகைச்சுவையாக பேசுறீங்க டாக்டர். என்னோட பிரச்சனை அது இல்லை வந்து...</b>

<b>டாக்டர் - பரவாயில்லை தைரியமாக சொல்லுங்கள் டாக்டர்கிட்ட எதுவுமே மறைக்கக்கூடாது.</b>

<b>கிருஷ்ணா - என்னோட பிரச்சனையே என் மனைவிதான்.</b>

<b>டாக்டர் - உங்களுக்கும் அதே பிரச்சனையா... சரி சொல்லுங்கோ</b>

<b>கிருஷ்ணா - எங்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று வருசம் ஆகிவிட்டது. அதுக்குள்ளே எங்க மணவாழ்க்கை முறிந்து போய் விடுமோ என்று பயமாயிருக்கு.</b>

<b>டாக்டர் - மணவாழ்க்கை தானே..? உங்க கை காலுக்கு ஏதும்...</b>

<b>கிருஷ்ணா - டாக்டர் நான் சீரியஸா சொல்றன்.</b>

<b>டாக்டர் - நானும் சீரியஸாத்தான் கேட்கிறன். ம்... பிறகு சொல்லுங்கோ.</b>

<b>கிருஷ்ணா - கலியாணம் ஆகி ஒரு வருசம்தான் ஆகியது...</b>

<b>டாக்டர் - குழந்தை பிறந்திருக்கும் பிறகு அது இது என்று செலவுதானே... பிரச்சனை வந்திருக்கும்</b>

<b>கிருஷ்ணா - இல்லை டாக்டர் எங்களுக்கு இன்னும் குழந்தை இல்லை.</b>

<b>டாக்டர் - ஓ... அதுதான் பிரச்சனையா...? அதுக்கு நீங்கள் வேறு டாக்டரிடம் அல்லவா போயிருக்க வேண்டும்.</b>

<b>கிருஷ்ணா - ஐயோ டாக்டர் கல்யாணம் ஆகி ஒருவருடத்துக்குள் என் மனைவியின் குணமே மாறிவிட்டது. சந்தேகம் எதுக்கெடுத்தாலும் சந்தேகம்.</b>

<b>டாக்டர் - சந்தேகமா...?</b>

<b>கிருஷ்ணா - டாக்டர் நான் வேலையால் வந்தவுடனேயே நாய் மோப்பம் பிடிக்கிற மாதிரி என்கிட்ட வந்து மோப்பம் பிடிப்பா.

[b]டாக்டர் - டென்மார்க் நாட்டில் தான் நல்ல நல்ல பிஸ்கட் எல்லாம் இருக்கிறதே.. வாங்கிப்போட வேண்டியது தானே..?</b>

<b>கிருஷ்ணா - என்னிடம் ஏதாவது பொம்பிளை வாசனை இருக்கின்றதா.. என்று தான். இப்படித்தான் ஒருநாள் என் சட்டை பட்டனில் சிக்கியிருந்தது நீளமான கறுப்புமுடியைப்பார்த்துவிட்டு எத்தனை நாளாக இந்த நாடகம் என்று என்னை ஒரு வழி பண்ணிவிட்டா. நானும் ஏதோ என் தர்மபத்தினியை சமாதானப்படுத்தி விட்டேன். அடுத்த நாளும் பிரச்சனை தான். நீண்ட நறைத்த வெள்ளைமுடி எமனாக வந்தது. என்னப்பா ஒரு கிழவியை கூட விட்டு வைக்க மாட்டியா என்று ஓரே நச்சரிப்பு. அன்றும் ஏதோ சாக்கு போக்கு சொல்லி சமாளித்து விட்டேன். ஆனால் அதற்கு அடுத்த நாளே நடந்ததே...
[b]
டாக்டர் - சொல்லுங்கள் மிகவும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு.</b>

<b>கிருஷ்ணா - அன்று என் சட்டைப்யை நல்லா செக் பண்ணிப்போட்டு வீட்டுக்கு போனேன் வெற்றி வீரனாக... ஆனால்... சோதனை எல்லாம் முடிந்த பிறகு கேட்டாளே... ஒரு கேள்வி; எனப்பா போயும் போயும் ஒரு மொட்டைத்தலை பொண்ணுதானா உனக்கு கிடைத்தாளா... என்று அழுது அடம்பிடித்து அவவின் அம்மா வீட்டுக்கு போய்விட்டா.
நீங்கதான் அவவை என்னோடு சேர்த்து வைக்கவேணும்

[b]டாக்டர் - அழுகை</b> Cry Cry Cry

<b>கிருஷ்ணா - நீங்கள் எதுக்கு அழுறீங்கள்..?

[b]டாக்டர் ஆமாம் உங்கள் மனைவியாவது உங்களை விட்டுட்டு அவ அம்மா வீட்டுக்குத்தான் போனா. ஆனால்... என் மனைவி சந்தேகப்பட்டு என்னையே இங்கே அனுப்பி விட்டா.</b>

<b>கிருஷ்ணா - அனுப்பிவிட்டாளா...? என்ன டாக்டர் உங்கள் தொழில் பார்க்கத்தானே.. இங்கே வந்திருக்கிறீங்கள்...

[b]டாக்டர் - . இங்கே நான் நல்லாயிருக்கிறேனா என்று இல்லையா என்று சி.ஐ.டி. வேலை பார்க்கத்தானே என் மனைவி உன்னை இங்கே அனுப்பியிருக்கிறாள்</b>

<b>கிருஷ்ணா - ஐயோ டாக்டர் என்ன சொல்றீங்கள்...?

[b]டாக்டர் - ஆமாம் நீ என் மனைவி அனுப்பிய ஆள்தானே..? உன்னை என்ன செய்கிறேன் பார் </b>

மேசை மீது இருந்த பொருட்கள் எல்லாவற்றையும் கிருஷ்ணா மீது தூக்கி எறிய ஆரம்பித்த போது... வெள்ளை ஆடையுடன் இருவர் வந்து டாக்டர் வேஷம் போட்டு இருக்கும் மனநோயாளியை அன்புடன் அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார்கள்.
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
சந்தேகம் எதிலும் சந்தேகம்.... - by shanmuhi - 03-21-2005, 01:43 AM
[No subject] - by KULAKADDAN - 03-21-2005, 01:46 AM
[No subject] - by kavithan - 03-21-2005, 01:46 AM
[No subject] - by anpagam - 03-21-2005, 01:47 AM
[No subject] - by MEERA - 03-21-2005, 02:24 AM
[No subject] - by yalie - 03-21-2005, 03:49 AM
[No subject] - by hari - 03-21-2005, 07:34 AM
[No subject] - by tamilini - 03-21-2005, 01:39 PM
[No subject] - by Danklas - 03-21-2005, 02:03 PM
[No subject] - by shobana - 03-21-2005, 02:10 PM
[No subject] - by ரோபட் - 03-21-2005, 02:34 PM
[No subject] - by கீதா - 09-08-2005, 07:48 PM
[No subject] - by Senthamarai - 09-08-2005, 08:22 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)