Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிழக்கில் கருணா குழு
#2
<b>இராணுவ பிரதேசத்தில் கருணா குழு: ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியது ஆங்கில சஞ்சிகை!!</b>

<img src='http://img91.exs.cx/img91/1011/pic2003051nj.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழத் தேசிய இயக்கத்திற்கு துரோகமிழைத்து சிங்கள இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவின் முகாம் ஒன்று சிறீலங்கா இராணுவ கட்டுப்பாட்டிற்குட்பட்ட பிரதேசமான வெலிக்கந்தை தீவுச்சேனையில் அமைந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் புகைப்பட ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

அந்த இராணுவ பிரதேசத்தில் தமிழ்ச்; சிறுவன் ஒருவன் ஆயுதங்களுடன் இருப்பதை வெளியிட்டுள்ள அந்த சஞ்சிகைää தங்கள் அமைப்பில் சிறுவர்களை சேர்த்துவருவதாக புலிகள் மீது குற்றம்சாட்டி வருகிற சிறீலங்கா அரசாங்கமே 12 வயதிற்கும் குறைவான தமிழ்ச்;சிறுவன் இராணுவ பிரதேசத்தில் கருணா குழு என்ற பெயரில் நடமாடுவதை அனுமதித்துள்ளது என்பதையும் பிரதமானமாகச்; சுட்டிக்காட்டியுள்ளது.
சண்டே லீடர் அம்பலப்படுத்திய தகவல்கள்: கடந்த ஏழு மாத காலமாக குறிப்பிட்ட இந்த முகாம் தீவுச்சேனையில் செயற்படடு வருகின்றது.

மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதி செவனப்பிட்டியவிலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் இந்த முகாம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் ஒரு பக்கம் முஸ்லிம்களும் மறுபக்கம் தமிழர்களும் வசிக்கின்றனர்.கிராமத்திற்குள் எமது செய்தியாளர்கள் நுழைந்தபோது பதுங்குழியொன்று இருந்தது.

அதில் காவற் கடமையில் நவீன ரக துப்பாக்கியுடன் 12 வயது தமிழ்ச் சிறுவன் காணப்பட்டான். அச்சிறுவனின் தகவல் படி மங்களம் மாஸ்டர் என்பவர் தலைமையில் இந்த முகாம் இயங்குகின்றது.
அவரை சந்திப்பதற்காக நாம் முயற்சிகள் மேற்கெண்ட போதிலும் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு தனக்கு அனுமதி இல்லை என மற்றுமொரு உறுப்பினர் ஊடாக அவர் கூறிவிட்டார்.
பொதுமக்கள் மற்றும் படைத்தரப்பு தகவலின் படி இந்தக் குழுவினரே விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் படுகொலையின் பின்னணியில் இருந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இவர்கள் இங்கு இருப்பதை கிராம மக்கள் விரும்பவில்லை. ஆனால் படையினரின் ஒத்துழைப்பு இவர்களுக்கு இருக்கின்றது. இவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளோ அல்லது கருத்துக்களோ வெளியிட்டால் கொலை அச்சுறுத்தலை எதிர்நோக்கி வாழ்கின்றனர் அப்பாவி கிராம மக்கள்.

கடந்த மார்ச் 14 ஆம் திகதி இரவு இப்பகுதியில் உள்ள ஹரபொல கிராமத்தைச்; சேர்ந்த இரண்டு இளைஞர்களை கருணா குழுவினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர்.
(இந்த இளைஞர்கள் படுகொலை குறித்தும் இந்த படுகொலைக்கு மங்களம் மாஸ்டர் என்பவர்தான் காரணம் என்றும் புதினம் முன்பே செய்தி வெளியிட்டிருந்தது)
இப்பகுதி மக்கள் அச்சத்துடனும் பீதியுடனும் வாழ்கின்றார்கள்.
இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் குழு என்று யாராவது இருக்கின்றார்களா என கேட்டால் கண்டும் காணாதவர்கள் போல் தெரிந்தும் தெரியாதவர்கள் போல் அப்படி இருக்கிறார்கள் என்றுதான் கேள்விப்படுகிறோம் என்று இரகசியமாக கூறுகிறார்கள்.

கருணா தரப்பினருக்கு சிறீலங்கா அரசு ஆதரவளித்து வருவதாக விடுதலைப் புலிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தபோதும் சிறீலங்கா அரசு அதை நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
[b]

,,,,.
Reply


Messages In This Thread
இராணுவ பிரதேசத்தில் கருணா குழு: ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியது - by selvanNL - 03-20-2005, 03:47 PM
[No subject] - by வியாசன் - 03-20-2005, 06:17 PM
[No subject] - by kirubans - 03-20-2005, 08:06 PM
[No subject] - by வியாசன் - 03-20-2005, 09:57 PM
[No subject] - by MEERA - 03-21-2005, 02:34 AM
[No subject] - by kirubans - 03-21-2005, 03:16 AM
[No subject] - by Mathan - 03-21-2005, 11:35 AM
[No subject] - by Mathan - 03-21-2005, 11:41 AM
[No subject] - by Mathan - 03-21-2005, 11:57 AM
[No subject] - by Mathan - 03-21-2005, 12:32 PM
[No subject] - by vasisutha - 03-21-2005, 10:18 PM
[No subject] - by Mathan - 03-22-2005, 12:32 AM
[No subject] - by Mathan - 03-22-2005, 12:44 AM
[No subject] - by tamilini - 03-22-2005, 12:48 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)