03-20-2005, 03:14 PM
tamilini Wrote:ஆகா குருவிகள் இது கேவலம் என்றில்லை உண்மையைச்சொன்னம். இப்ப வாழ்க்கையில சாதாரனமாய் நடக்கிறதை சொல்லுறம். ஆண் ஒரு A/L பாஸ் பண்ணியிருப்பார் பெண் 9 ம் வகுப்பு முடிச்சிருக்க மாட்டா அந்த குடும்பத்தில பாவம் பெண்ணைப்படுத்துவினம். படிப்பறிவில்லாதவள் அது இது என்று.
இப்ப டொக்கடரோ இன்சினியரோ அந்த துறையில அவைக்கு கொஞ்சம் ஏனும் தெரியும் இல்லையா..?? ஒன்றும் தெரியாது என்பது கொஞ்சம் கஸ்டமான விடயம் தானே.
எங்களை விட றொம்ப படிச்சவர்களுடன் படிப்பறிவில்லாமல் நமக்கு ஒன்றும் தெரியாதே என்று கவலைப்படுவதை விட. எங்கள் தகமைக்கு ஏற்ற மாப்பிளையைப்பாத்துவிட்டால் அந்த ஏற்றத்தாழ்வு என்று விடயத்திற்கு இடமே இல்லை இல்லையா..?? அங்கும் சமநிலை பேனப்படுது. நான் உனக்கு எந்தவிதத்திலும் குறைந்தவள் இல்லை என்று வாழலாம். அன்புதான் முக்கியம் என்று சொல்லுவினம் பிறகு. சம்பளத்தில் இருந்து ஓய்வெடுப்பது வரை இதைத்தான் சொல்லுவினம். பெரிய கவுன்டக்கிளாக் உத்தியோம் என்று நமக்கு தெரியாதா இந்த ஆணாதிக்க சமூகம் பற்றி. அதுவும் அரைவாசிக்கு மேலானவர்களிற்கு பெண்களை மதிக்கவே தெரியிறதில்லை. பிறகு மிதிக்க இலகுவாக இருக்கும். இப்படி குட்டுப்பட்டு வாழ்வதை பெண் தவிர்க்கலாம் தானே. எல்லாருக்கும் டாக்டரும் என்ஜினியரும் தானே வேணும் என்றால் மாடு மேய்ப்பவர்கள் விவசாய் செய்பவர்கள் கதி என்ன ஆகிறது. அவர்களும் வாழத்தானே வேணும் அங்கு தான் நீ படிச்சவன் நான் படிக்காதவன் என்கிற வேற்றுமையிருக்காது. :wink:
ஏங்க ஒரு விவசாயம் பண்ணுற பையன ஒரு டாக்குத்தர் பொண்ணு கட்டிக்கிட்டா என்ன நடந்திடும்...அப்படிச் செய்வதுதான் அவர்களின் குழந்தைகள் சமூகத்தில் தகுந்த கல்வி அறிவு பெற வழிவகுக்கும்...உங்களப் போல் ஓல் ஓல் ஓட நின்றால் வரும் வாரிசுகள் 8 ஓட நிக்குங்கள்...ஆக தராதரம் என்பது குடும்பத்துக்கல்ல...தேவைக்கு எங்க அவசியமோ அங்க பாவிக்கிறத்திற்கே அன்றி...வேறிற்கில்லை...! :wink:
கல்வி அறிவில் பிந்தங்கிய நிலை என்பது களையப்பட வேண்டின் கல்வி அறிவு பெற்றவர்கள்...அதற்கான சந்தர்ப்பத்தை இழந்தவர்களைத் திருமணம் செய்வதே மேல்....! அதற்கேற்ற மனமாற்றங்கள் சமூகத்தில் அவசியம்...! ஆண்கள் அதைப் பலகாலமாகச் செய்கிறார்கள்...பெண்கள் தான் இப்படியான நிலைகளுக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ள முனைய வேண்டும்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

