03-18-2005, 03:35 PM
சினிமா என்ற பொழுதுபோக்கு அம்சம் தான் எங்கட மொழி வாழ்வதையும் அழிவதையும் தீர்மானிக்க போகுதா? ஊரோடினால் ஒத்தோடு என்று சொல்லுவினம். நான் நினைக்கிறன் குறைந்த பட்சம் ஏன் ஓடுது என்று கேட்டுவிட்டு ஓடும் திறனாவது நம்மிடம் இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் கட்சிகளை பிரபல்யப்படுத்த கிடைத்த நல்ல உணர்ச்சிவசப்படுத்தும் மொழித்தலைப்பை தூக்கி பிடித்தால் நாங்களும் அதை நம்பி அவர்களுக்கு வால் பிடிக்க நினைக்கின்றோம். கோசங்கள் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கின்றன. கருணைஇல்லம் என மாட்டிறைச்சிக்கடைக்கு பெயர்சு10ட்டி விட்டால் போதுமானதா? அது போல தான் இதுவும். வரப்போகிற வக்கிரம் பி.எப் என்று வந்தால் என்ன புளுபிலிம் என்று வந்தால் என்ன நீலப்படம் என்று எந்தால் என்ன. மாடுவிழுந்த பக்கமே குறி சுட்ட கதையாய் தமிழ் என்று சொல்லி விட்டால் நாமும் கோசம் போட தொடங்கி விடுகின்றோம்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பபொருள் மெய்ப்பொருள் காண்பதிறிவு.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பபொருள் மெய்ப்பொருள் காண்பதிறிவு.
.
.!!
.!!

