09-05-2003, 05:33 PM
Chandravathanaa Wrote:[size=18]<b>«ƒ£ÅÉ¢ý
æÂ¢Š ãì¨¸î º£È¢ ±È¢Åо¡ý ¦¸¡ïºõ «ÕÅÕôÀ¡¸ þÕó¾Ð.
«ÅÃÐ ¨¸Â¢ø ¿¡õ ¾¡Â¸ò¾¢ø À¡Å¢ìÌõ
´Õ ¨¸;Ì𨼨¡ÅÐ ¦¸¡Îò¾¢Õì¸Ä¡§Á ±É ±ñ½ò §¾¡ýÚ¸¢ÈÐ. ÍõÁ¡ §Ã¡ðÊø º£È¢ ±È¢óРŢðÎô §À¡ÅÐ þó¾ Ô¸òÐìÌô ¦À¡Õò¾Á¡É¾¡¸ò ¦¾¡¢ÂÅ¢ø¨Ä.
இப்படியான ஒரு காட்சியமைப்புக்கு என்னைத் àண்டியது எந்த நிகழ்ச்சியாக இருக்கும் என்று உங்கள் விமர்னத்தை வாசித்தது முதல் ஒரு போராட்டம் என் மனதுக்குள்........
பின்னர்தான் கண்டு பிடித்தேன்...............
அடிமனதில் இருக்குமொன்று எப்போதோ தலை துாக்குகிறது.
அதை அணைவர் முன் சொல்வதன் மூலம் உங்கள் வாழுவோடு ஒன்றி விட்ட இப்படியான நிகழ்வுகளை அவர்களது படைப்புகளுக்கும் சேர்த்துக் கொள்ள முடியும்.
நான் இலங்கையில் OCIC (Organitiation fo Intrnational Catholic Cinema) யில் இணைந்து படிக்கவும் , பணியாற்றவும் தொடங்கிய காலம் அது.
அன்று [b]ஹொரண ரங்கண கலா கேந்திர சபா</b>வின் ஆரம்பகர்த்தாக்கள் எனப்படும் இலங்கையின் மேடை நாடகங்களின் தந்தை எனப்படும் <b>பேராசிரியர் ஹேமசிரி லியனகே </b>மற்றும் வீதி நாடகங்களின் தந்தை எனப்படும் கொழும்பு பல்கலைக் கழக ஆங்கில <b>பேராசிரியர் காமினி ஹத்தெட்டுவேகம </b>ஆகியோரது மாணவர்களாக இருந்த காலத்தில் எனது நண்பன் <b>தர்மசிறி பண்டாரநாயக</b> நடித்து , இயக்கிய "பழங்கெட்டியோ" எனும் கறுப்பு வெள்ளை முழு நீள திரைப்படத்தை எங்கள் சினிமா ஆசான் :சர்வதேச விருது பெற்ற ஒளிப்பதிவாளர் <b>அன்றுா ஜயமான்ன</b> அவர்களுடன் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
<b>அப் படத்தில் வரும் ஒரு காட்சி என் மனதை விட்டு இன்றும் அகலாதது.</b>
கிராமத்தை விட்டு
தர்மசிரி படிப்புக்காக
கொழும்புக்கு வந்து தங்கியிருப்பான்.
அங்கே அவனுக்கு ஒரு காதலி கிடைத்து,
அவளோடு வாழ்கையை ஆரம்பிக்கிறான்.
ஆனால் இது பற்றிய விபரத்தை
தன் வாழ்வுக்காக
தன்னையே அர்பணித்து வாழ்ந்த
தாய்க்கு கூட சொல்லாமல் இருக்கிறான்.
இப்படியான ஒரு சமயத்தில்
அவனது தாய்
உடல் நலமில்லாமல் இருப்பதாக
ஒரு தந்தி வருகிறது.
காதலியோடு போக முடியாவிட்டாலும்.
காதலி அவனையாவது ஊருக்கு
போய் வரும் படி வற்புறுத்துகிறாள்.
அவன் தாயைப் பார்க்க
ஊருக்கு கிளம்புகிறான்.
அவனது வாடகை
மோரிஸ் மைனர் கார்
ஊருக்குள் நுழையும் போது
சோவென மழை கொட்டுகிறது............
மழையைக் கூட பொருட்படுத்தாமல்
அந்தக் கார் வேகமாக சந்து பொந்துகளைக்
கடந்து செல்கிறது.
முன் கண்ணாடியின்
மேல் வேகமாக விழும்
மழை நீரைத் துடைப்பதற்குக் கூட
வைப்பரால் இயலமலிருக்கிறது.
ஆங்காங்கே
கண்ணைக் குருடாக்கி விடுமோ என்ற
அச்சத்தைத் தரும்
மின் வெட்டுகள்
ஒரு பாதகத்தை
உள்ளத்துள் உருவாக்கி
உறையவைக்கிறது.
வாடைக் கார்
வீட்டு முற்றத்ததில் வந்து
நின்ற போதுதான்
அவனது பாவங்களைக்
கழுவியது போன்ற உணர்வோடு
வானம் தொடர்ந்து பெய்த - தன்
கோபக் கனலான மழையின்
அழுகையை நிறுத்திக் கொள்கிறது.
ஆனால்
தொடர்ந்தும் வடியும்
கண்ணீர்த் துளிகளைப் போல்
ஒரு சில மிகுதித் துளிகள் மட்டும்
சொட்டு சொட்டாய்
வடிந்து கொண்டிருக்கிறதுகிறது.
தர்மசிரி
வீட்டை நோக்குகிறான்...........
வெள்ளைக் கொடிகள்
வீட்டுக்கு வெளியே...............
ஆடாமல் அசையாமல்
மழையால் நனைந்து
தொங்கிப் போய்
சோர்விழந்து காணப்படுகிறது.....................
தர்மசிரி
நடை தளர்கிறான்......
தடுமாறுகிறான்............
முன் தள்ளப்படுகிறான்..............
முகத்திலிருந்த எதிர்பார்ப்புகள் ................
கலைந்து போய் முகம் இறுகுகிறது....................
வாய் பேச வார்தைகள் இல்லாமல் ..............
உதடுகள் கருகியது போல வறண்டு விடுகிறது.........
நடக்கக் கூடாதது நடந்து விட்ட
குற்ற உணர்வில்
முற்றத்து சகதியில்
சகதியாக விழுகிறான்.........
ஒரு கணம்தான்....................
சகதி தோய்ந்த முகத்துடன்
தலையைத் துக்கும் போது
எரிந்து கொண்டிருக்கும் விளக்குக்கு கீழே
தாயின் உயிரற்ற அந்த ஓவியம்...........
பேசாமல்..............
மெனமாக.........இறுதி மெளனமாக..............
அரவணைக்க தன் கரங்களைக் கூட
துாக்க முடியாமல்
இப்போதாவது உன் தரிசனம்
கிடைத்தது மகனே
அது போதும்
என்பது போல.................
தாயின் மாசற்ற அந்த முகம்...........
அவனைக் கூறு போடுகிறது.
இது வரை அவனுக்கு
கேட்ட வெளிப் பகுதி சத்தங்கள்,
அவன் கண்ணில் தென்பட்ட காட்சிகள்,
அத்தனையும் சூண்யமாகிவிட்ட நிலையில்
முற்றத்து படிகளில் விழுந்து கிடக்கிறான்.
(இங்கு இசையோ அல்லது எந்த சத்தமோ அல்லாத மயான அமதியாக காட்சி அமைக்கப் பட்டது.)
AJeevan
<b>விரக்தியுற்ற இதயங்களைக் கேளுங்கள் என்ன நடந்தது என்றே சொல்ல வாய் வருவதில்லை..........</b>

