03-18-2005, 03:17 PM
கிருபன்... மனிதனில் பால் துணிவில் இலிங்க நிறமூர்த்தச் சோடிகள் பக்கேற்கின்றன...! வெறுமனவே ஒரு X உம் ஒரு Y யும் பாலைத் தீர்மானிக்க முடியாது...! XX அல்லது XY இரு கூட்டு நிலையே பாலைத் தீர்மானிக்கின்றன...! வெறும் Y நிறமூர்த்தம் இருந்தால் அது மட்டும் ஆண் பாலைத்தீர்மானிக்காது...கூடவே ஒரு X நிறமூர்த்தம் அவசியம்....ஆண்கள் அந்த X நிறமூர்த்ததைப் பெண்களிடம் இருந்துதான் பெற வேண்டும்....! அதில் தான் பல நோய்களுக்கான ஜீன்கள் காவப்படுகின்றன...குறிப்பாக நோய்க்காவிப் பெண்களிடம் இருந்து வரும் வளமற்ற X மூலம்...! ஆண்களிடம் இருந்து பெண்ணுக்கு ஒரு X நிறமூர்த்தம் போகிறதென்றால்...அது முன்னர் வாங்கினதைத் திருப்பிக் கொடுப்பது போலத்தான்....! ஆனால் அங்கு ஆண்கள் தங்களை தியாக செய்து (அநேகம் சந்தர்ப்பங்களில் நோய்க்காவி X நிறமூர்த்தம் கொண்ட ஆண்கள் இறந்துவிடுவதால்) பெண்கள் வளமான ஆண்களிடம் இருந்து வளமான X நிறமூர்த்ததையே பெறுவர்...! ஆனால் ஆண்கள் மட்டும் காவிப் பெண்களிடம் இருந்து வளமற்ற X நிறமூர்த்தைத்தை வாங்க வழி இருக்கிறது...! இது ஆண்களுக்கு இயற்கை செய்யும் துரோகம்....! அதற்கு காவிப் பெண்கள் உறுதுணை...! அதன் பொருட்டுத் தலைப்பு சரியாத்தான் போட்டிருக்கு...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>