09-05-2003, 01:04 PM
<b>சரீஷின் நெஞ்சில் ஊற்றெடுத்து எழுதுகோல் வடித்தது</b>
மனம் நிறைந்து பாராட்ட
வாய்வழியே சொற்கள்
வந்திட மறக்குதய்யா
நெஞ்சு கனக்குதய்யா
Quote:சுதந்திர வாழ்வுக்காக
எம் இனத்தின்
இலட்சிய வேள்விக்காக
எம் இதய நிலத்திற்காக
இரத்ததானம் வழங்கிய...
ஈரநெஞ்சம் கொண்டவர்
Quote:முந்தையர்கள் சொல்லக்கேட்டு
மூச்சிழந்து போனேன் நான்
நெஞ்சவரை வந்தசோகம்
நெருப்பாக எரியக்கண்டேன்
கண்ணிரெண்டில் வந்தகண்ணீர்
கடலாக மாறக்கண்டேன்
பேச்சிழந்து போனேன் நான்
வண்ணமொழி மறந்தேன் நான்
வாய்திறந்து வாழ்த்திவிட
வாராதாம் ஒரு சொல்லும்...!
மனம் நிறைந்து பாராட்ட
வாய்வழியே சொற்கள்
வந்திட மறக்குதய்யா
நெஞ்சு கனக்குதய்யா
-

