Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்றைய தமிழில்- பெண்கவிகள்" part 1
#2
தொடற்சி.......
ஆய்வு முத்து நிலவன்.

பெண்ணுரிமை இயக்கம் அரசியலை அல்லாமல் தனியே வளர்வது முடியாது
எனும்போது, அதில் பெண்கவிகள் இன்னும்
ஈடுபடுவது அவசியமும், அவசரமுமான தேவையாகும். அரசியல்
பொருளாதாரக் காரணங்களையன்றி பெண்விடுதலை
ஏது? இந்த வகையில் புலம்பெயர் பெண்கவிகளின் பங்களிப்பே
கணிசமாக உள்ளது
போராட வந்தவள் மனைவியாய்
சமயலறையில் அடைபட்டிருக்கிறாள்
-அவ்வை(இலங்கை)
கற்பு பற்றியும்
மழை பெய்யெனப்பெய்வது பற்றியும் கதைக்க
அவர்கள் எப்போதும்
எனது உடலையே நோக்குவர்
-சங்கரி(இலங்கை) என்பன போன்ற வரிகளில் பெண்ணுரிமைக்குள்
அரசியல் இருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
அரசியல் :
சங்கரி-ஊர்வசி-அவ்வை--பாலரஞ்சனி (இலங்கை)
மைத்ரேயி-தமயந்தி-தம்பா-அர்ச்சனா-பிரியதர்சினி-பார்கவி-பானுபாரதி-(நோர்வே)
துர்க்கா-பிரதீபா-தான்யா-சுமதி ரூபன்-(கனடா)
றஞ்சனி-நிருபா-பாமினி-மல்லிகா-சாந்தி-உமா-சந்திரா(ஜெர்மனி)
அருந்ததி-ஜெயந்தி-(பிரான்சு)
ஆழியாள்-பாமதி-(ஆஸ்திரேலியா)
கௌரி-சந்திரா-(இங்கிலாந்து)
நளாயினி(சுவிஸ்) முதலான தமிழ்ப் பெண்கவிகள் தத்தம் அரசியல்
நிலைகளில் இருந்து, அருமையாக
எழுதிவருவதைத் தனியாகவே எழுதலாம்.(இக்கட்டுரை அதற்கு இடம் தராது
) எனினும் மாதிரிக்கு ஒரு சில
மட்டும்:

சொந்த மண்ணில் அகதியாய் வாழ்வதற்கும்அந்நிய மண்ணில் அகதியாய்
வாழ்வதற்கும் என்ன வித்தியாசம் என்று
கேட்பவருக்குப் பதில்கூறுவதான மைத்ரேயியின் கவிதை நெஞ்சைத்
தொடுவதாயிருக்கிறது.
'இருப்புக்கும் வாழ்வுக்கும்
என்ன வித்தியாசமென்று
நான் சொல்லத் தேவையில்லை'
-மைத்ரேயி

'திரும்பவும் திரும்பவும்
ஒன்றையேதான் நான் சொல்லிக்கொண்டிருப்பேன் :
நம்பிக்கை மீதான நம்பிக்கை'
-தமயந்தி, (இவை இரண்டும் 'புலம்பெயர்ந்தோர்
கவிதைகள்'-2001)

ஒரு மத குரு
அல்லது முக்காடணிந்த ஒரு மாது
ஒரு தாடிப் பிச்சைக்காரன்
இபடி இன்னும் வேறு யாராவது
என் வீட்டு வாசலில்
கதவைத் தட்டலாம்
-ஊர்வசி

உனது நண்பன் சொன்னான்,
மீசை அரும்பாத இந்த வயதில்
நாட்டுப் பற்று வந்ததா உனக்கு?
அப்படியானால்
கடமைகள் இருக்கும்
வீரனாய் வீடு திரும்பு!
-அவ்வை – (இவை இரண்டும்-"மரணத்துள் வாழ்வோம்"-1985)
'மைத்ரேயி, அவ்வை இருவரும் வயதில்
மிகவும்இளையவர்கள் என்பதும் கருதத்தக்கது' என்கிறார்
தொகுப்பாசிரியர்களுள் ஒருவராக முன்னுரை தந்துள்ள
கவிஞர் உ.சேரன்.

பிணத்தையும் தொடரும் சாதியாய், புலம்பெயர் வாழ்க்கையிலும்
பெண்ணடிமை வாழ்க்கை போகவில்லை யென்பதை,
'காலை மாலை இரவு எந்திரமாகி,
உறவின் பிணைப்பில் அமைதியாகி,
தியாகமே வாழ்க்கையாகி,

தாய்மையே அடையாளமாகி
அடக்கமே உருவமாகி,
இன்னும்...
ஓ! இல்லை!
உடலை உலுப்பு! உன்னுடன் பேசு!
தயாராகு பகிஷ்கரிப்பிற்கு!'
- றஞ்சினி(ஜேர்மனி) எழுதியுள்ள கவிதையில் காணமுடிகிறது.

அதற்காகத் தமிழகத்தில், அரசியல்கவிதை எதுவுமே பெண்களால்
எழுதப்படவில்லை என்றும் கூறிவிட இயலாது.

மறைமுக அரங்கம்:
காலம்: 24மணி நேரமும்
அரங்கம்: உங்கள் இல்லம், பொது இடங்கள்
வேலைபார்க்கும் இடம்
நீங்கள் இருக்கும் சூழல்
நாடகம்: உடல் அளவிலோ மன அளவிலோ
நீங்கள் வன்முறையைச்சந்திக்கும் போது
காட்சி1:
உங்கள் வட்டார வழக்கில் பேசிக்கொண்டோ
அல்லது பேசாமலோ அல்லது நீங்கள்
அழுதுகொண்டிருந்தாலும் கையை
சாதாரனமாக நீட்டி
தொடைகளுக்கு மத்தியில் வைத்து
வலுக்கொண்டமட்டும் அவன்
விதைகளைப் பிடித்து இழுங்கள்
காட்சி2:
உங்கள் காலடியில் மல்லாந்து துடிக்க
திரை விழுகிறது. -மாலதி மைத்ரி(சங்கராபரணி-2001)
கவிதையில் அரசியல் நிறைந்த பெண்ணுரிமைப் போருக்கு
பெண்களைத்தூண்டும் உள்ளடக்கம் அறைந்து
சொல்லப்பட்டிருக்கிறது.

உரத்தகுரலில் பேசக்கூடிய அரசியல், ஐக்கூவில் வரமுடியாது என்று
முதலில் சொல்லிக் கொண்டிருந்தவர்கள்,
தமிழில் ஐக்கூ அடைந்திருக்கும் இன்றைய வெற்றிக்கு அதன்
சமூக-விமர்சனப் போக்குத்தான் காரணம் என்பதையும்
புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டும் வருகிறார்கள்.
அடிபட அடிபட
அதிரும் பறை
தலைமுறைக் கோபம் -மித்ரா
எனும் ஐக்கூக் கவிதை அப்படியரு நல்ல அரசியல் கவிதையாக நான்
நினைக்கிறேன்.
கயிறு திரிப்பவன்
பறை அடிப்பவன்
தீய்ந்த மரக்கிளையாய் நிற்பவன்
நிமிர்ந்தால் -
தூக்குக் கயிறும் திரிப்பான்,
சாப்பறையும் அடிப்பான்.
-அரங்க மல்லிகா.('கல்வெட்டு பேசுகிறது' - ஜன.2003)
என்பன போன்ற, தனது (பெண் எனும்) வட்டத்தைத் தாண்டி வந்து எழுதிய
சத்தியஆவேசக்கவிதைகள் இன்னும்அதிகம்
வந்திருக்கவேண்டும்.இத்தனை யுகக் கொடுமையிலிருந்து வந்து,
இப்போதாவது எழுதுகிறார்களே என்பது ஆறுதலாக
உள்ளது.

ஆண்கவிஞர் பலரையும் போலவே, சொற்புனை நல்த்திலும், கற்பனை
வளத்திலும் இன்னும் முன்னேற
வேண்டியிருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் மிகச்சிறந்த பெண்கவிகள்
தமிழுக்குக் கிடைத்திருக்கிறார்கள்
என்பதை மறுக்கமுடியாது. புராண-புனைகதை, மற்றும் இன்றைய
ஊடகங்களால் பெண்ண்டிமைச்சிந்தனை தொடர்ந்து
ஊட்டப்பட்டுவரும் சூழலில், இன்னும் எச்சரிக்கையாகவும் எழுதவேண்டிய
கடமை இன்றைய தமிழ்ப் பெண்கவிகளுக்கு
உண்டென்று கருதுகிறேன்.
பெண்கவிகளில் மரபுக்கவிஞர் அதிகம் வெற்றிபெறவில்லை என்பதும்
ஆச்சரியமான ஒரு தகவல்!(முதலில் மரபு
எழுதிய திலகவதி பிறகு முற்றிலும் புதுக்கவிதையாளராகவே
மாறிவிட்டார் என்பது போன்றசெய்திகளும் தனி
ஆய்வுக்கு உரியது!)

பொருந்தாத வர்ணனைகள்
அமைதிகாக்க வந்தவர்கள்
என் வாழ்வின் அமைதியைக் கெடுத்தனரே!
-- -- -- -- -- -- -- -- --
பாய்ந்தனர் என்மீது
பதம் பார்த்தனர் என் உடலை.
(ஊடறு-பக்கம்:14, கவிஞர்பெயர் வெண்டாமென விடுகிறேன் -
நா.மு.)
-இது என்ன 'பதம்'பார்த்தல்? இது ஆணாதிக்கச்சிந்தனை அல்லவா?
பாலியல் வன்முறை என்னும் ஆணாதிக்கக்
கொடுமையைப் படிப்போர் அதன்மீது கோவமுறுமாறு எழுதவெண்டிய
கவிஞரே, -சில திரைப்படக்
கவிஞர்களைப்போல- அதன் மீது சுவையேற்றும் சொல்லைப்
பயன்படுத்துவது, அபத்தமல்லவா?

என்னைப்பாத்து முகம் நீட்டும்
கோரப்பற்கள்
ஆறறிவு நிறைந்த
நில ஜந்துக்களின்
முணகல்கள்
---இதுவும்கூட அப்படித்தான் பொருத்தமில்லாத்
வார்த்தையாகப் படுகின்றது.
கொடிய விலங்குகளின் 'உணவு'க்கான தேடல்வெறிக்கூச்சல், 'முணகல்'
என்றா அறியப்படும்? இன்னும்
சரியாகச்சொல்லியிருக்கலாம் இந்தக்கவிஞர். (இதுவும் அதே
நூல்:பக்கம்:56, வேறொரு கவிஞர்-பெயர்
வேண்டாமே? கவிஞரைப் பாராட்டும் போது பெயர் சொல்லிப் புகழ்வது
சரி, விமர்சிக்கும்போது, அவரது
பெயர்சொல்வது விமர்சன நாகரிகமல்ல என்று நினைக்கிறேன் -
நா.மு.)
இவரே பிறகு,
'இது எனக்கான பயணம்,
எனக்கான இருப்பைக்கூட
உறுதி செய்யும் படிநிலை'-என்பதும்,
' நாளை பலர் இந்த
பண்படுத்தப் பட்ட தரையில்
தம்மையும் பதியமிட வரலாம்' என்பதும் மிகச்சரியான வார்த்தைகள்.

எனக்கு நிறைய நம்பிகை இருக்கிறது, இன்றைய தமிழ்ப் பெண்கவிகள்
தமிழை மட்டுமல்ல தங்கள் சமூகத்தையும்
முன்னேற்றுவதில் 'ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்' என்று வெற்றிக்
கவிபாடும் நாள் வெகுதூரத்தில் இல்லை!
என்று நான் உறுதியாக நம்புகிறேன்

பெண்கள் தங்களைப்
பிணித்திருக்கும் தளைகளை
அணிகலன்கள் என்றே
ஆனந்திக்கிறார்கள்
தங்கள் கூண்டுகள்
தங்கத்தாலானவை என்று
தலைகனத்துப் போகிறார்கள்!

இளைய நிலவுகாள்!
இனித் தேயாதீர்!
சூரிய வட்டமாய்ச்
சுடர்க!
-திலகவதி

( இந்தக் கட்டுரையை எழுத, 20ஆம் நூற்றாண்டின் தமிழ்ப் பெண்
கவிதைகளின் தொகுப்பான-"பறத்தல் அதன்
சுதந்திரம்"(காவ்யா வெளியீடு), உலகப் பெண் படைப்பாளிகளின்
தொகுப்பான-"ஊடறு..", "கண்ணில்
தெரியுது வானம்"(இரண்டும் 'விடியல் பதிப்பகம்') மற்றும் சென்னை
'நிழல்'வெளியீடான 'புலம்
பெயர்ந்தோர் கவிதைகள்', ஆகிய நூல்கள் பெரிதும் உதவின
என்பதோடு,அந்தந்தக் கவிஞர்களின்
தொகுப்புகளும்,கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ள இதழ்களும்
பெருந்துணையாக இருந்தன என்பதை நன்றியோடு
தெரிவித்துக் கொள்கிறேன் -நா.மு.)
------------------------
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Messages In This Thread
[No subject] - by nalayiny - 09-05-2003, 10:16 AM
[No subject] - by sOliyAn - 09-05-2003, 12:55 PM
[No subject] - by Chandravathanaa - 09-07-2003, 12:18 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)