Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாப்பாவும் பார்த்தீபனும்...!
#1
பாப்பாவும் பார்த்தீபனும்...!

(கிட்டத்தட்ட நான்கு வயது சிறுமி ஒருத்தியிடம்
தியாக தீபம் திலீபனைப்பற்றி என்னதெரியும் என கேட்டபோது...
அந்தச் சிறுமி வார்த்தைகளை விழுங்கி விழுங்கி
சொன்ன பதில் என்னை மெய்சிலிர்க்கச் செய்தது
அவள் சொன்ன வார்த்தைகளை கவிதையாக
எழுது என்றது எனது.........)

சுதந்திர வாழ்வுக்காக
எம் இனத்தின்
இலட்சிய வேள்விக்காக
எம் இதய நிலத்திற்காக
இரத்ததானம் வழங்கிய...
ஈரநெஞ்சம் கொண்டவர்
எங்கள் திலீபன் அண்ணா....!

முந்தையர்கள் சொல்லக்கேட்டு
இந்தக்கதை நான் அறிந்தேன்
என் நெஞ்சுவரை வந்தசோகம்
நெருப்பாக எரியக்கண்டேன்
பேச்சிழந்து போனேன் நான்
வண்ணமொழி மறந்தேன் நான்
வாய்திறந்து வாழ்த்திவிட
வாராதாம் ஒரு சொல்லும்...!

உண்ணாமல் உருகிநின்ற உத்தமனை
எண்ணாமல் நாமிருந்தால்-அவர்
கண்ணான கனவெல்லாம்
மண்ணாகிப்போகாதா...???

பசியோடு இருந்தாராம்
பாரதத்தை எதிர்த்தாராம்
பார்போற்ற உயர்ந்தாராம்

இதையெல்லாம்
முந்தையர்கள் சொல்லக்கேட்டு
மூச்சிழந்து போனேன் நான்
நெஞ்சவரை வந்தசோகம்
நெருப்பாக எரியக்கண்டேன்
கண்ணிரெண்டில் வந்தகண்ணீர்
கடலாக மாறக்கண்டேன்
பேச்சிழந்து போனேன் நான்
வண்ணமொழி மறந்தேன் நான்
வாய்திறந்து வாழ்த்திவிட
வாராதாம் ஒரு சொல்லும்...!


த.சரீஷ்
03.09.2003 பாரீஸ்
sharish
Reply


Messages In This Thread
பாப்பாவும் பார்த்தீப - by sharish - 09-05-2003, 08:45 AM
[No subject] - by Manithaasan - 09-05-2003, 01:04 PM
[No subject] - by Paranee - 09-06-2003, 05:11 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)