03-17-2005, 02:12 PM
தமிழர்கள் ஆரம்பம் முதல் கல்விக்கான தேடலுடன் இருந்து வருகிறார்கள். அதாவது மிசனரிகள் ஆரம்பித்த பாடசாலைகளில் கல்விகற்று பலர் அரசபணிகளை பெற அதை பார்த்து பலரும் அதை நோக்கி நகரும் நிலை தொடங்கியது. இதை தடுக்க இந்து கல்லுரிகளின் தோற்றமும்...ஆங்கில மொழி மூல கல்வியும் தமிழர்களை அதிக அரச பதவிகளை அலங்கரிக்க உதவியது. முதல் படித்த இலங்கையருக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் தமிழருக்கு கிடைத்தது. ஆரம்ப காலங்களில் அரசபதவி பல்கலைகழகங்களில் தமிழர்களின் ஆதிக்கம் என்பவை சிங்களவர்களுக்கு எரிச்சலை கொடுத்த விடயங்கள். ஆரம்பம் முதல் அரச பதவிகளில் இருந்தவர்களுக்கு கிடைத்த வசதி அந்தஸ்த்து என்பவை மேலும் மெலும் அவர்களது தேடலை துண்டியது. தொடாந்தார்கள் பல்கலை கழகம் போவது கற்பது அரசபதவி பெறுவது தமது வாழிவை ஒரு நிலைப்படுத்துவது என்பதற்கு மேல் அவர்கள் சிந்திப்பது அரிது. அரச பதவிகளில் நுளைவதற்காக தான் கற்பது போன்ற ஒரு அவல நிலை. விஞ்ஞானம் சார் துறைகளை கற்று வெளியேறுபவர்கள் அரச பதவிகள் கிடைப்பது அருகிபோனதால் எப்படியாவது ஓரு புலமை பரிசில் அல்லது மாணவருக்கான விசாக்களை பெற்று வாழ்க்கையை வழப்படுத்த புறப்பட்டு விடுகிறார்கள்.
இன்றும் அரச பதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிள் தாம் கற்றதை பயன்படுத்தி சுய தொமழிலில் ஈடுபட முயல்வதில்லை. எல்லோரிடமும் வசதி இல்லாவிட்டாலும் வசதி உள்ளவர்கள் ஈடுhடலாம் வெளிநாட்டு பணவருவாய் உள்ள பட்டதாரிகள் கூட முயல்வதில்லை.
மொத்தத்தில் கற்பது மதிப்பு
பல்கலைகழகம் போவது மதிப்பு
அரச பணியில் நுளைந்து வாழ்வை வளப்படுத்தி கொள்வது. பின்
அதை காரணம் காட்டி சீதணம் பெறுவது. இறுதி இலக்கு வளமான வாழ்வு தேடல் மட்டுமே.

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>