Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படுகொலைகள்
#11
1990 ஆம் ஆண்டு செப்ரெம்பர் படுகொலைகள் நினைவாக
மட்டு. மாவட்டத்தில் 5 ஆம் திகதியை துக்க தினமாக
அனுஷ்டிக்கக் கோரிக்கை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990 ஜூன் மாதத்திற்குப் பின்னர் பாதுகாப்புப் படைகளாலும், ஊர்காவற் படையினராலும், தேசவிரோதக் கும்பல்களாலும் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து நாளை 5ஆம் திகதி துக்க தினம் அனுஷ்டிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெருமன்றமும், மட்டக்களப்பு, அம்பாறை இந்து ஆலயங்களின் தலைமை ஒன்றியமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு சகல இந்து, கிறிஸ்தவ ஆலயங்களிலும் மணிகள் ஒலிக்கப்பட்டு 7 மணிக்கு விசேட புூஜைகள் நடத்தப்படவேண்டும் எனவும், களியாட்ட நிகழ்வுகளைத் தவிர்த்து சோக இசை எழுப்பப்படுவதோடு, பொதுக் கட்டடங்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் அனைத்திலும் கறுப்புக் கொடியேற்றப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் உட்பட அனைத்து பொது மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து செல்வதோடு பாடசாலைகள் அனைத்திலும் காலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரும் நிகழ்வுகள் இடம்பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்குப் பல்கலைக்கழக அகதி முகாமில் 1990ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 5ஆம் திகதி 158 பொது மக்களும், 9ஆம் திகதி சத்துருகொண்டான் பிள்ளையாரடி, கொக்குவில் பனிச்சையடி கிராமங்களைச் சேர்ந்த 187 பொதுமக்களும், 23 ஆம் திகதி மீண்டும் பல்கலைக்கழக அகதிமுகாமில் 16 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

அன்றைய தினம் வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழக மைதானத்தில் காலை 10 மணிக்கு படுகொலையுண்டோரை நினைவுகூரும் பொதுக்கூட்டமும், படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக து}பி அமைப்பதற்கு அடிக்கல்லும் வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் :பாடும்மீன்
Reply


Messages In This Thread
படுகொலைகள் - by sethu - 06-25-2003, 07:14 PM
[No subject] - by sethu - 06-25-2003, 07:15 PM
[No subject] - by sethu - 08-10-2003, 08:43 AM
[No subject] - by P.S.Seelan - 08-10-2003, 12:40 PM
[No subject] - by Mathivathanan - 08-10-2003, 01:27 PM
[No subject] - by sethu - 08-12-2003, 07:19 AM
[No subject] - by P.S.Seelan - 08-12-2003, 12:47 PM
[No subject] - by sethu - 09-03-2003, 06:43 PM
[No subject] - by Mathivathanan - 09-03-2003, 10:39 PM
[No subject] - by sethu - 09-04-2003, 07:47 PM
[No subject] - by sethu - 09-04-2003, 07:47 PM
[No subject] - by sethu - 09-10-2003, 06:27 PM
[No subject] - by sethu - 09-10-2003, 06:28 PM
[No subject] - by sethu - 09-10-2003, 06:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)