03-17-2005, 05:57 AM
ஆங்கிலப் பெயருர்களுடன் வரும் தமிழ் திரைப்படங்கள் கனடாவில் திரையிடப்பட்டால் அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக தமிழ் படைப்பாளிகள் கழகம் அறிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கழகத்தின் செயற்க்குழு கூட்டத்தில் இவ் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடாத்தும் ஆங்கிலப் பெயர்களுக்கெதிரான இப்போராட்டத்தை புகலிடத்தில் தமிழ் படைப்பாளிகள் கழகம் முன்னெடுக்க விருக்கிறது. தற்போது கனடாவில் நிறைவேற்றப்பட்டடுள்ள இத்தீர்மாம். தொடர்ந்து பிரித்தானியாவிலும் கொண்டு வரப்பட விருப்பதாக தமிழ் வார இதழ் ஒன்றிற்க்கு தமிழ் படைப்பாளிகள் கழகத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இதனை ஒரு முன் உதாரணமாகக் கொண்டு ஏனைய நாடுகளில் இருக்கும் சமுதாய நோக்கமுள்ள அமைப்புக்கள் ஆங்கிலப் பெயர் வைத்த தமிழ் திரைப்படங்களை எதிர்க்க முன்வரவேண்டும் என் வேண்டுகொள் விடுக்கிறோம்.
எதிர்வரும் இந்து வருடப்பிறப்பின் பொது வெளிவரவிருக்கும் இரண்டு ஆங்கிலப் பெயர் கொண்ட தமிழ் படங்களின் வெளியீட்டுக் கெதிராக தமிழ் நாட்டில் மட்டுமன்றி கனடாவிலும் போராட்டங்கள் நடைபெறவிருக்கிறது.
நன்றி: வன்னித்தென்றல்
நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>