03-17-2005, 05:15 AM
ஏன் தமிழினி அழுகிறீர்கள்? நான் உங்களுக்கு ஒன்று சொல்லவில்லை, நான் காளான் வறுவல் எப்படி செய்தல் என்றுதான் போட்டனான்! ஆனால் தமிழ் யுனிகோட்டில் ஏதோ பிரச்சனை வந்து நான் போடாத வாக்கியம் எல்லாம் வந்துட்டு, கத்தியால் மிளகாய்யை சிறு துண்டுகளாக நறுக்கவும் என்று போட கத்தி வாள் என்று மாறிட்டு! இப்ப மோகன் அண்ணா அதை சரி செய்துட்டாராம்!
<b>காளான் வறுவல்</b>
--------------------------------------------------------------
தேவையானவற்றின் பட்டியல் இதோ.. ஊறவைத்த வெண்ணிறக் காளான் 125 கிராம்。 ஊறவைத்த கறுப்புக் காளான் 125 கிராம் நீண்ட பச்சை மிளகாய் 15 கிராம் கேரட் 15 கிராம், சமையல் எண்ணெய் 150 கிராம் உப்பு 2 கிராம், மிளகு சிறிதளவு. சர்க்கரை 1 கிராம் இனி, செய்முறை. முதலில் இரண்டு வகை காளான்களின் தண்டுகளைக் கிள்ளி எறிய வேண்டும். பிறகு நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். பச்சை மிளகாய் கேரட் ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பின் மீது வாணலியை வைத்து சிறிதளவு சமையல் எண்ணெயை அதில் ஊற்றி, காய விடவும் இருவகை காளான் நறுக்கிய பச்சை மிளகாய் , கேரட், உப்பு , சர்க்கரை ஆகியவற்றை வாணலியில் கொட்டி ,2 நிமிடம் வேக விடவும் பிறகு மிளகைச் சேர்த்து தட்டுக்கு மாற்றிக் கொள்ளவும். இப்போது மணம் வீசும் காளான் வறுவல் தயார். தட்டில் வைத்துப் பார்க்கும் போது கறுப்பு வெள்ளை நிறத்தில் கண்ணைப் பறிக்கும். சுவையோ அபாரம்.