Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செய்வினை, சூனியம் நம்பிக்கை உண்டா?
#55
சரி சரி... நீங்கள் எல்லாரும் கேக்குற படியால சொல்லுறன்.

அண்மை காலத்தில நான் தாயகம் சென்றுவந்தேன். கிட்ட தட்ட 16 வருடங்களுக்கு
பின்னர். சிறு வயதிலேயே வந்த படியால சிறுவயதில் பார்த்த முகங்களை கற்பனை செய்து கொண்டு போன எனக்கு
முகம் தெரியாத உறவுகள் மட்டுமே அறிமுகமானது. அகண்ட வீதிகளெல்லாம் ஒடுங்கிப்போய் இருந்தன. சிறுவயதில்
வீதியின் ஒரு கரையிலிருந்து மறுகரை தாண்டுவதே உயிர்போகும் விடயமாக இருந்தவை இப்போது இரண்டு அடி
எடுத்து வைப்பில் தாண்டியது வியப்பாக இருந்தது. ஊரே மாறிப்போயிருந்தது மனிதர்கள் பலரும் கூட.

எமது வீட்டுக்கு பக்கத்து வீடு பற்றி நான் அறிந்த விடயம்தான், இந்த செய்வினை, சூனியம் பற்றி கேள்வி எழ அடித்தளமாக இருந்தது. அதாவது, எமது பக்கத்து வீடும், காணியும் இடிபாடுகள் நிறைந்த யாருமே வசிக்க முடியாத படி பற்றைகள் நிறைந்து காணப்பட்டது. ஆரம்பத்தில் யுத்தத்தின் கோரபற்களுக்கு பலியானவற்றில் இதுவும் ஒன்றென எண்ணினேன். ஆனால், ஊரிலுள்ள வயோதிபர் ஒருவர் சொன்னார். அவரை அப்பப்பா என்றுதான் அழைப்பேன். அவர் கூறியது தான் துாக்கி வாரிப்போட்டது. அவர் சொன்னார், அந்த காணியில யாரோ செய்வினை செய்து போட்டிருக்கினமாம், அதனால் அங்க வாழ்ந்த குடும்பம் சிதறி சின்னா பின்னமாக போய்விட்டது என்று. அந்த காணியில் வசித்து வந்தது ஒரு அழகான சிறிய குடும்பம். தாய், தந்தை 2 பெண், 3 ஆண் - நடுத்தர குடும்பம். நான் சிறு வயதில் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தனால் நன்றாக நினைவிருக்கிறது. அவர்களுக்கு அந்த காணி சொந்தமானது அல்ல வாடகையே. அவர்கள் அங்கு வருவதற்கு முன் 4 வீடு தள்ளியுள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தார்கள். அங்கு வீட்டு உரிமையாளரின் மகன் இவர்களது மகனை காதலித்த விடயம் தொடர்பாக பிரச்சனை உருவாக இங்கே வந்து குடியேறி இருந்தார்கள். இங்கே குடியேறும் வரை ஒரளவு வசதியாகத்தான் இருந்தார்கள். ஆனால், வந்தபின் சோதனைமேல் சோதனை. அயலவர்களுடன் சண்டை. வேலை வாய்ப்புகள் இன்றி பட்டினி, ஆண் பிள்ளையின் நண்பர்கள் வீட்டுக்கு வருவதால் பெண்பிள்ளைகளுடனான உறவில் காதல். இதனால் பெற்றோர்களுடன் சண்டை. அதுவரை அவர்கள் படிப்பில் மிகவும் கெட்டிக்காரர்கள். ஊரில் மிகவும் மதிக்கப்பட்ட பெண்கள். முத்தவர் ஆண்மகன் பலநேரங்களில் நோய்ப்பட்டே இருப்பார். சில நேரங்கள்தான் வெளியே காணும் வாய்ப்பு கிடைக்கும்.

இப்படியான குடும்பம் நான் வெளிநாடு வந்த சில காலங்களில் சின்னாபின்னமாக போய்விட்டது. நோய்வாய்ப்பட்ட அந்த ஆண்பிள்ளைக்கு எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் நோய் தீராமல் இளவயதில் இறந்துபோனார். பெண்பிள்ளைகளில் ஒருவர் காதலித்து திருமணம் முடித்து வேற்றுார் சென்றார். அதன் பின் குடும்பத்துடன் தொடர்பே இல்லையாம். மற்றைய 2 ஆண்பிள்ளைகள் காணியில் வெடிக்காமல் கிடந்த கைக்குண்டு வெடித்ததில் பலியாகியுள்ளனர். மிகுதியாய் இருந்த அந்த பெண் மற்றும் பெற்றோர்கள் அநாதரவாக அந்த வீட்டிலேயே இறந்து கிடந்திருக்கிறார்கள். சில நாட்களின் பின்னரே அது ஊரவர்களால் கண்டறியப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்படி அந்த சின்னபின்னமாக போன அந்த குடும்பம் பேரரில் நேரடியாக பாதிப்படையாமல் இப்படி போனது குறித்து அப்பப்பா சொன்னார் " அந்த காணியில் குடியிந்த யாருமே இப்போது உயிருடன் இல்லை என்றும். இவர்களுக்கு முன் இருந்தவர்கள் கூட துாக்கு போட்டு தற்கொலை செய்தவர்கள் என்றும் சொன்னார். இந்த காணியில் யார் வசிக்க வந்தாலும் உருப்படாமல் உருக்குலைந்து போனவர்கள்தான். காரணம் யாரோ எதோ காரணத்துக்காக அந்த காணியில் செய்வினை செய்து இருக்கினம். அத இன்னும் ஒருத்தரும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறினார்.

இதை செய்வினையில் நம்பிக்கை இல்லை என்று சொல்லலாம்.
ஆனால்,....... :?: :?: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
:: ::

-
!
Reply


Messages In This Thread
[No subject] - by வியாசன் - 03-14-2005, 10:31 PM
[No subject] - by Kurumpan - 03-14-2005, 10:35 PM
[No subject] - by Mathan - 03-14-2005, 10:38 PM
[No subject] - by shanmuhi - 03-14-2005, 10:40 PM
[No subject] - by Kurumpan - 03-14-2005, 10:50 PM
[No subject] - by வியாசன் - 03-14-2005, 11:09 PM
[No subject] - by tamilini - 03-14-2005, 11:25 PM
[No subject] - by KULAKADDAN - 03-14-2005, 11:28 PM
[No subject] - by Danklas - 03-15-2005, 12:13 AM
[No subject] - by vasisutha - 03-15-2005, 12:39 AM
[No subject] - by Danklas - 03-15-2005, 12:41 AM
[No subject] - by Vasampu - 03-15-2005, 12:55 AM
[No subject] - by Danklas - 03-15-2005, 12:57 AM
[No subject] - by Vasampu - 03-15-2005, 01:08 AM
[No subject] - by Hariny - 03-15-2005, 01:15 AM
[No subject] - by vasisutha - 03-15-2005, 01:19 AM
[No subject] - by Danklas - 03-15-2005, 01:20 AM
[No subject] - by kirubans - 03-15-2005, 01:31 AM
[No subject] - by Kurumpan - 03-15-2005, 01:39 AM
[No subject] - by Hariny - 03-15-2005, 01:42 AM
[No subject] - by Kurumpan - 03-15-2005, 01:42 AM
[No subject] - by yalie - 03-15-2005, 02:17 AM
[No subject] - by vasisutha - 03-15-2005, 02:22 AM
[No subject] - by vasisutha - 03-15-2005, 02:26 AM
[No subject] - by yalie - 03-15-2005, 02:31 AM
[No subject] - by Mathuran - 03-15-2005, 03:09 AM
[No subject] - by thamizh.nila - 03-15-2005, 03:18 AM
[No subject] - by Double - 03-15-2005, 03:31 AM
[No subject] - by Mathuran - 03-15-2005, 03:42 AM
[No subject] - by thivakar - 03-15-2005, 08:46 AM
[No subject] - by sinnappu - 03-15-2005, 09:15 AM
[No subject] - by Danklas - 03-15-2005, 10:16 AM
[No subject] - by வியாசன் - 03-15-2005, 11:13 AM
[No subject] - by thamizh.nila - 03-15-2005, 12:07 PM
[No subject] - by வியாசன் - 03-15-2005, 12:49 PM
[No subject] - by Thaya Jibbrahn - 03-15-2005, 01:30 PM
[No subject] - by thivakar - 03-15-2005, 01:39 PM
[No subject] - by Thaya Jibbrahn - 03-15-2005, 02:26 PM
[No subject] - by thivakar - 03-15-2005, 02:41 PM
[No subject] - by Thaya Jibbrahn - 03-15-2005, 03:33 PM
[No subject] - by thamizh.nila - 03-15-2005, 03:58 PM
[No subject] - by Vasampu - 03-15-2005, 04:08 PM
[No subject] - by shiyam - 03-15-2005, 06:34 PM
[No subject] - by tamilini - 03-15-2005, 06:36 PM
[No subject] - by pepsi - 03-15-2005, 06:47 PM
[No subject] - by tamilini - 03-15-2005, 06:55 PM
[No subject] - by pepsi - 03-15-2005, 08:30 PM
[No subject] - by Thusi - 03-15-2005, 08:53 PM
[No subject] - by aswini2005 - 03-15-2005, 10:51 PM
[No subject] - by AJeevan - 03-15-2005, 11:19 PM
[No subject] - by Kurumpan - 03-16-2005, 01:02 AM
[No subject] - by vasisutha - 03-16-2005, 04:40 AM
[No subject] - by shanmuhi - 03-16-2005, 10:55 PM
[No subject] - by Kurumpan - 03-16-2005, 11:58 PM
[No subject] - by shiyam - 03-17-2005, 06:36 PM
[No subject] - by tamilini - 03-17-2005, 06:40 PM
[No subject] - by vasisutha - 03-17-2005, 09:28 PM
[No subject] - by MUGATHTHAR - 03-19-2005, 12:01 PM
[No subject] - by Danklas - 03-19-2005, 12:11 PM
[No subject] - by MUGATHTHAR - 03-19-2005, 01:56 PM
[No subject] - by வியாசன் - 03-20-2005, 01:39 PM
[No subject] - by tamilini - 03-20-2005, 02:06 PM
[No subject] - by Kurumpan - 03-21-2005, 04:13 AM
[No subject] - by thamizh.nila - 03-22-2005, 01:08 PM
[No subject] - by kavithan - 03-23-2005, 01:54 AM
[No subject] - by தூயா - 03-25-2005, 08:40 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)