03-16-2005, 01:46 AM
தொழில்வள மற்றும் வளரும் நாடுகளின் எரிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாடு
உலகின் இருபது தொழில்வளம் மிக்க, மற்றும் வளரும் நாடுகளின் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் இங்கே லண்டனில் சந்திக்கும் முக்கிய மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது.
வெப்பவாயுக்கள் வெளியேற்றத்தால் பூமி அதிக வெப்பமடைந்து வருவதை அடுத்து, வெப்பவாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், அதேவேளை பொருளாதார அபிவிருத்தி பாதிக்கப்படக்கூடாது என்பது இவர்கள் சந்திப்பின் நோக்கம்.
இந்தச் சந்திப்பில் முக்கிய உரையாற்றிய பிரிட்டிஷ் நிதிஅமைச்சர் கார்டான் ப்ரவுன், பருவநிலை மாற்றம் என்பது சமூகநீதி தொடர்பான பிரச்னையாகவும் இருக்கிறது - உலகின் தொழில்வளமிக்க நாடுகளே பருவநிலை மாற்றத்தை அதிகம் விளைவித்திருக்கின்றன, ஆனால் அது வளரும் நாடுகளை அதிகம் பாதிக்கிறது என்றார்.
பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், மேற்குலகம் மாசுபடாத எரிபொருட்களுக்கு மாற வேண்டும், இல்லையேல் வளரும் நாடுகளின் அபிவிருத்தி, வெப்ப வாயுக்களை மேலும் வெளியேற்றும், இதனால் பூமிக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
from
BBC Tamil

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>