03-15-2005, 03:33 PM
வியாசன் நீங்கள் சொல்லும் மட்டக்களப்பு விடயத்தில் எனது பார்வை வித்தியாசமானது. ஆனால் நண்பர்கள் யாரும் இந்த விடயத்தை பிரதேச வாரியாக பார்த்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழர்களுக்கே உரித்தான விருந்தோம்பல் பண்பு மட்டக்களப்பு மக்களிடம் சற்று அதிகமாகவே உள்ளது. பாடசாலை ஆசிரியர்கள்ää கமநலத்திணைக்களம் என பல்வேறு பணிகளுக்கு பிற தேச வாசிகள் அந்த நகருக்கு செல்வது வழமை. இங்கே இன்னொரு விடயத்தையும் சொல்லி விடுகின்றேன். யாழ் மண்ணில் உங்களுக்கு ஒரு நண்பன். அவன் பெயர் சுரேஸ் என்று வைத்துக்கொள்வோம். அவனுக்கு ஒரு தங்கையும் உள்ளாள். நீங்கள் சுரேசை தேடி அவன் வீட்டிற்கு போகின்றீர்கள். அவன் வீட்டிற்கு வாசலில் நின்று சைக்கிள் பெல்லை அடித்து சுரேஸ் என்று அழைப்பீர்கள். உள்ளிருந்த படியே ஒரு அநாமதேய குரல் வரும். அவர் இல்லை. வெளிய போட்டார் என்று. நீங்கள் திரும்பி விடுவீர்கள். இதுவே மட்டக்களப்பு என்றால் வாசல் திறந்த படியே இருக்கும். நீங்கள் சுரேஸ் என அழைத்தபடி உள்ளே செல்வீர்கள்- அவன் தங்கை ஓடி வந்து வாங்கோ அண்ணா உள்ளுக்கு வாங்கோ என்று தேநீர் பரிமாறியபடியே சொல்லுவாள் அண்ணா வெளிய போட்டார். இப்ப வந்திடுவார் என்று.
இந்த விருந்தோம்பல் பண்பில் மயங்கிய நம்மவர்கள் தங்கள் நிலை மறந்து காதல் வயப்படுவது உண்மை. ஆனால் மீளவும் தங்கள் தேசத்திற்கு சென்றதும் தங்கள் நிலையுணர்ந்து மாறிவிடுவார்கள். இங்கே அதிகம் பாதிக்கப்படுவது வஞ்சகம் இல்லாமல் இருக்க இடம் கொடுத்து விருந்தோம்பல் செய்தவர்கள் தான். அதுமட்டுமில்லாமல் அவரை சு10ழ்ந்துள்ளவர்கள் தங்கள் பிள்ளை அல்லது உறவினன் உத்தமன் என்பதை நிரூபிக்க கதை ஒன்றை அவிழ்த்து விடுவார்கள் மட்டக்களப்பு பாயோட ஒட்டிற்று என்று. ஆக இது தொடர்பில் நாம் பழமொழிகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டியவர்களாகவுள்ளோம் என்பதே என் கருத்து வியாசன்.
யாரும் தவறாக நினைக்க வேண்டாம். நானும் யாழ் மண் வாசி தான். ஆனாலும் எப்பொருள் யார் யார் வாய் கேப்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு.

.
.!!
.!!