Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செய்வினை, சூனியம் நம்பிக்கை உண்டா?
#39
எஙகள் வீடு பிரதான வீதியில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு ஓழுங்கையில் உள்ள 4 வீடுகளில் உள்ளது. எமது வீடு முதலாவது. இரண்டாவது வீட்டில் 11 பிள்ளைகள். 09 ஆண்கள் 02 பெண்கள். மூத்த பிள்ளை பெண். கட்டுக்கோப்பில்லாத அந்த வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவும் தான். ஆண் பிள்ளைகள் காதல் என்ற பெயரில் தனித்தனியே பிரிந்து விட்டார்கள். இரண்டாவது பெண்பிள்ளையும் வெளிநாட்டிலிருந்து வந்த அந்த வீட்டின் உரிமையாளரின் பையனை காதலித்து தனிக்குடித்தனம் போய் விட மிஞ்சியது 2 3 ஆண்பிள்ளைகளும் அந்து மூத்த அக்காவும் தான். அந்த நேரத்தில் தான் 3 வீட்டிற்கு வாடகைக்கு ஒரு தம்பதியினர் வந்தனர். அவர் இலங்கை கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றவர். பிள்ளைகள் இல்லை. அந்த காலகட்டம் கோட்டை ராணுவ முகாமை மீட்பதற்கான உக்கிர போர் நடைபெற்ற காலம். எமது வீட்டில் பங்கர் அமைக்க வசதியில்லாததால் 2 வது வீட்டில் அவர்களது பங்கரையும் எமது பங்கரையும் அருகருகே அமைத்திருந்தோம். அப்போது 3 வீட்டில் வந்திருந்த அந்த ஓய்வு பெற்ற நபர் இந்த அக்காவை பாலியல் ரீதியில் தவறாக அணுகமுற்பட்டுள்ளார். அவர் அதை தவிர்த்து விடவே அவர் செய்வினை செய்ததாக சொல்லப்பட்டது. முதலில் அந்த நபர் பற்றி எங்களிடமே முறையிட்ட அக்கா காலப்போக்கில் அவரது வீட்டிலேயே தனது ஓய்வு நேரங்களை கழிக்க தொடங்கி விட்டார். இதை தட்டிக்கேட்க முற்பட்ட தனது தந்தையுடன் சண்டை போட்டு அற்த சண்டை முற்றி எமது அயலவர்கள் எல்லாம் அந்த வீட்டில் கூடிவிட்டார்கள். இவ்வாறு அநேகம் தடவை நடைபெறுவது வழமை. ஆனால் அப்போது எல்லாம் எல்லாவற்றையும் பொறுமையாக தாங்கி அமைதி காத்து வந்த அந்த அக்காவே பெரும் பலத்துடன் சண்டை போட்டு தந்தையின் வேட்டியை கூட உரிந்து விட்டார். எமது அயலில் அந்த அக்கா அந்த வீட்டில் பிறந்ததே பாவம் என பேசுமளவுக்கு நன் மதிப்பை கொண்டிருந்த ஒருவர். எந்த நேரமும் சமையல் சகோதரர்களி;ன் ஆடைகள் துவைப்பது என ஓய்வற்ற வேலை- திடீரென இப்படியொரு மாற்றம். இறுதியில் பூசாரி ஒருவரிடம் கொண்டு போனார்கள். அவர் சொன்னார் இவரை அடையும் முயற்சியில் செய்வினை செய்யப்பட்டிருக்கின்றது. அதை அகற்ற வேண்டும். இதுவரை நடந்த சம்பவங்களுடன் நான் செய்வினையை தொடர்புபடுத்தவில்லை. இனி தான் விடயமே.

அந்த பூசாரி ஏதோ புசை எல்லாம் செய்த பின்னர் கேட்கும் சாப்பாடெல்லாம் கொடுக்க சொல்லி விட்டு போய்விட்டார். (குறிப்பு: அக்கா இந்த காலகட்டத்தில் சாப்பாட்டில் அக்கறை கொள்ளவில்லை) நித்திரையாய் கிடக்கும் அக்கா திடீரென எழும்புவார். பொங்கல் வேணும் என்பார். 1 கொத்து அரிசியில் பொங்கினால் அவரே அவளவையும் சாப்பிடுவார். பின்னர் பழம் என்பார். கொடுத்தால் 1 சீப்பு வாழைப்பழம் முழுவதும் உண்பார். இளநீர் என்பார். குறைந்தது 10 இளநீர் ஒரேயடியாக குடிப்பார். இவையெல்லாம் நான் நேரடியாக பார்த்த சம்பவங்கள். இவை முடிந்த பின்னர் நன்றாக நித்திரை கொள்ளுவார். திடீரென பெரும் சத்தம் கொண்டு எழும்புவா. இப்படியான ஒரு நேரத்தில் தான் புக்காரா விமானங்கள் வரவே நாங்கள் அவர்கள் வீட்டிற்கு பங்கருக்குள் ஓடினோம். எமது விதி... நித்திரையாய் கிடந்த அக்காவை எமது பங்கருக்குள் கொண்டு வந்து இறக்கி விட்டார்கள். இறுதி நேரம் தந்தையார் ஓடிவந்து அக்கா எழும்பினா இதை கையில் வைச்சு ஊதி விடு என்று ஒரு விபூதி பொட்டலத்தை எனது கையில் திணித்து விட்டு தங்களது பங்கருக்குள் போய் விட்டார். திடீரென அக்கா பெரும் சத்தம் போட்டுகொண்டு எழும்பினார். எனது சகோதரிகள் பயந்து விட்டார்கள். புக்காராக்கு பயந்து இங்கு வந்தால் .. இது வேறு பயம். நான் அந்த விபூதியை உள்ளம் கையில் வைத்து ஊதினேன். ஏதோ மயக்க மருந்து கொடுத்தது போல் அக்கா மீன படுத்துவிட்டார். அந்த சம்பவத்தின் பிறகு புக்காரா வந்தாலும் நாங்கள் பங்கரை பெரிதாக நாடவில்லை என்பது வேறு கதை. இப்படி ஏதோ எல்லாம் செய்து அவர் ஓரளவு தேறிவிட்டார். கடந்த வருடம் நான் வீட்டிற்கு போன போது அவர் திருமணம் செய்து 3 பிள்ளைகளும் உள்ளார்கள். ஆனால் அவர் பழைய அக்கா இல்லை. எமது வீட்டோடு நல்ல மாதிரி இல்லை. நாங்கள் தொலைந்து போனால் தான் தனக்கு நிம்மதி என்பதாக நெடுக திட்டுவாராம். நான் நிக்கும் போது திட்டினார்- எனக்கு கோபம் வந்துவிட்டது. அப்போது எனது அப்பா அந்த பிள்ளைக்கு நடந்த பிரச்சனை தெரியும் பிறகேன் ரென்சனாகிறாய். நாங்க இத்தின வருசமா பொறுத்து கொண்டு தான் இருக்கிறம் எண்டார். அவரின் தாயார் என்னுடன் நல்ல பாசம். ஆனால் அவர்கூட அக்காக்கு தெரியாமல் தான் என்னை வந்து சந்தித்தார். நான் சாப்பிட சொல்லி கேட்டேன். அவர் சொன்னார்.... உங்கள் வீட்டில் வந்து யாருக்கும் சொல்லாமல் சாப்பிடும் உரிமை எனக்கு இருக்கிறது. ஆனால் வருவதில்லை. ஏனென்றால் பிறகு அக்கா உங்கள் வீட்டை கண்டபடி திட்டுவாள். நீங்க எல்லாதையும் பொறுத்து கொண்டு இருக்கிறதே பெரிய விடயம் என்று. நான் இங்கு வந்து ஒரு சில மாதங்களில் அந்த தாயாரும் இறந்து விட்டார். அவர் கூட இறக்கும் நேரத்தில் சரியாக துன்பப்பட்டதாக எனது தந்தை சொன்னார். காலை 8.00 மணிக்கெல்லாம் எமது வீட்டின் முன்னால் உள்ள வாசிகசாலைக்கு வருவாராம். இரவாகும் வரை அதிலேயே குந்தி கொண்டு இருப்பாராம். கண்களால் கண்ணீர் வழிந்த படியே இருக்குமாம். அப்பா சொன்னார் அவர் உண்ணாமல் இருந்து தான் இறந்திருக்க வேண்டும் என்று-

நண்பர்களே.... இது நான் சந்தித்த உண்மை சம்பவம். எந்த திரிவுபடுத்தலும் இல்லாமல் சொல்லி இருக்கின்றேன். உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். (குறிப்பு: அக்காவின் தாய் தந்நை அந்த பக்கத்து வீட்டு தம்பதிகள் எல்லாம் இப்போது இறந்து வி;ட்டார்கள்)
.
.!!
Reply


Messages In This Thread
[No subject] - by வியாசன் - 03-14-2005, 10:31 PM
[No subject] - by Kurumpan - 03-14-2005, 10:35 PM
[No subject] - by Mathan - 03-14-2005, 10:38 PM
[No subject] - by shanmuhi - 03-14-2005, 10:40 PM
[No subject] - by Kurumpan - 03-14-2005, 10:50 PM
[No subject] - by வியாசன் - 03-14-2005, 11:09 PM
[No subject] - by tamilini - 03-14-2005, 11:25 PM
[No subject] - by KULAKADDAN - 03-14-2005, 11:28 PM
[No subject] - by Danklas - 03-15-2005, 12:13 AM
[No subject] - by vasisutha - 03-15-2005, 12:39 AM
[No subject] - by Danklas - 03-15-2005, 12:41 AM
[No subject] - by Vasampu - 03-15-2005, 12:55 AM
[No subject] - by Danklas - 03-15-2005, 12:57 AM
[No subject] - by Vasampu - 03-15-2005, 01:08 AM
[No subject] - by Hariny - 03-15-2005, 01:15 AM
[No subject] - by vasisutha - 03-15-2005, 01:19 AM
[No subject] - by Danklas - 03-15-2005, 01:20 AM
[No subject] - by kirubans - 03-15-2005, 01:31 AM
[No subject] - by Kurumpan - 03-15-2005, 01:39 AM
[No subject] - by Hariny - 03-15-2005, 01:42 AM
[No subject] - by Kurumpan - 03-15-2005, 01:42 AM
[No subject] - by yalie - 03-15-2005, 02:17 AM
[No subject] - by vasisutha - 03-15-2005, 02:22 AM
[No subject] - by vasisutha - 03-15-2005, 02:26 AM
[No subject] - by yalie - 03-15-2005, 02:31 AM
[No subject] - by Mathuran - 03-15-2005, 03:09 AM
[No subject] - by thamizh.nila - 03-15-2005, 03:18 AM
[No subject] - by Double - 03-15-2005, 03:31 AM
[No subject] - by Mathuran - 03-15-2005, 03:42 AM
[No subject] - by thivakar - 03-15-2005, 08:46 AM
[No subject] - by sinnappu - 03-15-2005, 09:15 AM
[No subject] - by Danklas - 03-15-2005, 10:16 AM
[No subject] - by வியாசன் - 03-15-2005, 11:13 AM
[No subject] - by thamizh.nila - 03-15-2005, 12:07 PM
[No subject] - by வியாசன் - 03-15-2005, 12:49 PM
[No subject] - by Thaya Jibbrahn - 03-15-2005, 01:30 PM
[No subject] - by thivakar - 03-15-2005, 01:39 PM
[No subject] - by Thaya Jibbrahn - 03-15-2005, 02:26 PM
[No subject] - by thivakar - 03-15-2005, 02:41 PM
[No subject] - by Thaya Jibbrahn - 03-15-2005, 03:33 PM
[No subject] - by thamizh.nila - 03-15-2005, 03:58 PM
[No subject] - by Vasampu - 03-15-2005, 04:08 PM
[No subject] - by shiyam - 03-15-2005, 06:34 PM
[No subject] - by tamilini - 03-15-2005, 06:36 PM
[No subject] - by pepsi - 03-15-2005, 06:47 PM
[No subject] - by tamilini - 03-15-2005, 06:55 PM
[No subject] - by pepsi - 03-15-2005, 08:30 PM
[No subject] - by Thusi - 03-15-2005, 08:53 PM
[No subject] - by aswini2005 - 03-15-2005, 10:51 PM
[No subject] - by AJeevan - 03-15-2005, 11:19 PM
[No subject] - by Kurumpan - 03-16-2005, 01:02 AM
[No subject] - by vasisutha - 03-16-2005, 04:40 AM
[No subject] - by shanmuhi - 03-16-2005, 10:55 PM
[No subject] - by Kurumpan - 03-16-2005, 11:58 PM
[No subject] - by shiyam - 03-17-2005, 06:36 PM
[No subject] - by tamilini - 03-17-2005, 06:40 PM
[No subject] - by vasisutha - 03-17-2005, 09:28 PM
[No subject] - by MUGATHTHAR - 03-19-2005, 12:01 PM
[No subject] - by Danklas - 03-19-2005, 12:11 PM
[No subject] - by MUGATHTHAR - 03-19-2005, 01:56 PM
[No subject] - by வியாசன் - 03-20-2005, 01:39 PM
[No subject] - by tamilini - 03-20-2005, 02:06 PM
[No subject] - by Kurumpan - 03-21-2005, 04:13 AM
[No subject] - by thamizh.nila - 03-22-2005, 01:08 PM
[No subject] - by kavithan - 03-23-2005, 01:54 AM
[No subject] - by தூயா - 03-25-2005, 08:40 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)