03-15-2005, 03:46 AM
உண்மைக்கதை என்று தொடங்குகிறது! குறைந்த செலவில் கூடுதலாக காட்சிக்குக் காட்சி யதார்த்ததாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இளவயதில் எப்படி எங்கே காதல் முளை விடும் எனத் தெரியாமல் அந்தஸ்து பார்க்காமல் முளைவிட்டுக் கிளை விட்ட ஒரு காதல் சோடி ஊரை விட்டு ஓடிப் போய் படும் அவஸ்தைகளையும் திருமணமான அன்றோ அல்லது மறுநாளோ வேலைக்குப் போகும் பொறுப்புணர்வையும் அன்பை காட்டி அழைத்துச் சென்று அடித்து நொருக்கும் அவலத்தையும் காதல் கணவன் உயிர் பிழைத்தால் போதும் எங்கேயாவது நல்லாக வாழட்டும் என்று தாலியைத் தூக்கி எறிந்து தான் உறைந்து போவதும் காலஓட்டத்தில் மீண்டும் திருமணம் செய்து கணவன் குழந்தையுடன் வாழும் போது கழற்றியெறிந்த தாலியைக் கையில் சுற்றிக் கொண்டு பைத்தியமாய் அவன் அலைவதுமாக கதை நகர்கின்றது. இல்லை ஓடுகின்து. உன்னோடுதான் இனி நான் வாழ்வேன் என்று ஓலமிட்டுக்கதறும் நாயகியை குழந்தையின் அழுகுரல் ஒருகணம் நிறுத்தவும் பின் கணவனே அவனையும் அவளையும் அழைத்துச் செல்வதாகப் படம் முடிகின்றது! ஒரு மனநல மருத்துவமனையில் சேர்த்து விட்டு அவளையும் குழந்தையையும் ஒரு காப்பகத்தில் இந்த மனிதாபிமானமுள்ள கணவன் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றான் எனும் எழுத்தோட்டத்துடன் படம் நிறைவடைகின்றது!! நீண்ட நாட்களின் பின் நம்பகத்தன்மையுடைய ஒரு சினிமா பார்த்த திருப்தி! வடிவேலுவின் சாயலில் வரும் சிவகுமார் இலங்கையர் என்று கேள்வி! நாயகன் பாரத்தும் புதுமுக நாயகி சந்தியாவும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கின்றனர்! சாதியால் அந்தஸ்தால் பிளவுபடும் காதல் கதையைக் கொண்ட திரைப்படங்கள் பல ஏற்கனவே வந்திருந்தாலும் இந்தக் காதல் நெஞ்சை நிறைத்துக் கண்களைக்கசியச்செய்து விட்டது! பாடல்களும் அருமை!! இன்னுமொருமுறை பார்க்கலாம் என்றுள்ளேன்! பார்த்து விட்டு வேறு ஏதாவது கண்ணில் பட்டால் சொல்கின்றேன்!!!! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
!!

