03-15-2005, 02:17 AM
பேய் பிசாசுகள் இருக்குதோ இல்லையோ உடலை விட்டுப்பிரிந்த ஆன்மா அந்தரத்தில் உலாவுவதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்! அதே போல் செய்வினை செய்து இறந்ததாக கூறப்பட்ட ஒருவருடைய மரணவீட்டில் பெட்டியை மூடும் போது எங்கிருந்தோ வந்து விழுந்த ஒரு செண்பகக்குஞ்சையும் நேரடியாகப் பார்த்திருக்கின்றேன். அதையும் உயிரோடு உள்ளே வைத்துத் தான் எரித்தார்கள். அதைவிட நன்றாகவே விளைந்த ஒரு நிலத்தில் பொறாமையின் காரணமாக செய்வினை செய்யப்பட்டு 4 அல்லது5 வருடங்கள் எவ்வளவோ முயன்றும் தரிசாகக் கிடந்தது என்றும் பின் வேறு ஒருவர் வாங்கிய அடுத்த வருடமே ஓகோ என்று விளைந்தது என்றும் நேரடியாகச் சம்பந்தப்பட்வர் கூறக் கேட்டிருக்கின்றேன். ஆனால் உண்மை பொய் தெரியாது. ஆனால் இன்று விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா பிரான்ஸ் போன்றவை கூட பேய்ää செய்வினை ஆகியவை உண்மை போல் தானே திரைப்படங்கள் எடுக்கின்றன!
!!

