03-14-2005, 11:09 PM
நான் ஊரிலை பாத்திருக்கிறன். காய் வெட்டுறன் எண்டு எலும்மிச்சம் பழத்தை கத்தியாலைவெட்டுவினம். எலும்மிச்சம்பழ நடுவிலை சிவப்பாக வந்தால் செய்வினை இருக்கு எண்டுவினம்(செம்பருத்தம்பூவை கத்தியிலை பூசிவைச்சிருக்கிற தந்திரம் அது) இப்படி சில இரசாயனமாற்றங்களையும் தந்திரங்களையும் வைத்துக்கொண்டு மந்திரவாதிகள் ஏமாற்றுவார்கள். பேய்பிடித்திருக்கிறது எண்டு பெண்களை சாட்டையால் அடிப்பார்கள். அடிவேதனையில் பெண்கள் ஏதாவது ஒரு பேயின (?); பெயரை கூறி தான்போவதாக கூறுவார். நரம்புத்தளர்ச்சி உள்ள பெண்களை பேய்பிடித்தாக கூறுவர் அவர்கள்முன் உடுக்கு அடிக்கும்போது அவர்கள் ஆடுவார்கள் அதை பேயாடுது எண்ணுவார்கள்.(பேய் பிடித்திருக்கிறது என்பதில் சில பாலியல் பிரச்சனைகளும் உண்டு)
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

