03-14-2005, 06:06 PM
இளம் வயதில் அதிகம் பேர் கடவுள் மறுப்பு கொள்கையுடைவராக இருக்கிறார்கள். நடுத்தர வயது வர வாழ்வின் இருப்பு மற்றும் இறப்பு பற்றிய பயம் வர கடவுளைப்பற்றிய தேடலை தொடங்குகிறார்கள்.பின் முதுமையடைய கடவுள் எப்பிடியாவது இருக்க வேணடுமென்று விரும்புகிறார்கள் மதம், சித்தாந்தம் என்று நம்பிக்கையில்லாதவன் கூட இந்த அகணட பிரபஞ்சத்தை இயக்க ஒரு சக்தி இருக்கென்று நம்பமுனைகிறான். இதில் விஞ்ஞானிகள் தெளிவான கருத்தை இன்னும் வைக்கவில்லை.

