03-14-2005, 05:53 PM
கடவுள்
வருவாயில் ஒருபத்துயூரோ
வாழ்வு தந்த மண்ணுக்கு
வரமளிப்பீரோ......?
வாசல்களில் வைத்தே
வாய்களால் துரத்துவோம்.
வரம்தருவதாய் மனிதர்
சாமியைச் சொல்லி ஏமாற்ற
சந்து பொந்தெங்குமிருந்து
யூரோக்களும் ää பவுண்களும்
டொலர்களும் இன்னுமின்னும்
பண்டங்கள் அமுத சுரபியாகிறது.
ஆயிரம் மைல் கடந்தும்
அம்மாளைத் தரிசிக்க
சிற்றிபாங்கில் கடனெடுத்தும்
செய்வோம் நேத்திகள்
ஏனென்றால் சாமிக்கெல்லோ
செய்கிறோம் நேத்தி.
ஏன்.....?
கேட்டால் கடவுளைச் சாட்டு....
கொலைநடக்கிறது மண்ணில் - என்
மதம் சொல்கிறது....
உயிர் கொல்ல நீ உதவாதே....!
ஊருக்கு உதவினால் - என்னை
ஆண்டவர் தண்டிப்பார்.
ஆனாலும் இலக்கியம் படைப்போம்
கொலையென்று சொல்லும் தியாகங்களை
கொலுவைத்து வணங்கச் சொல்லி.
'ஊர் திண்டாப் பேர் உறவு திண்டா புற்று"
அட அதுகூட இல்லை.
சாமியின் பேர் சொல்லி
நம்மைச் சுரண்டும்
உண்டியல்கள் உருப்பெருக்க
யாரையோவெல்லாம்
அம்மனென்றும் ää முருகனென்றும்
ஆண்டவராய் வரித்து
பாவங்களைச் சேர்ப்போம்
இதுவே எங்களின் சாபங்களாகிறது.
29.04.03.
வருவாயில் ஒருபத்துயூரோ
வாழ்வு தந்த மண்ணுக்கு
வரமளிப்பீரோ......?
வாசல்களில் வைத்தே
வாய்களால் துரத்துவோம்.
வரம்தருவதாய் மனிதர்
சாமியைச் சொல்லி ஏமாற்ற
சந்து பொந்தெங்குமிருந்து
யூரோக்களும் ää பவுண்களும்
டொலர்களும் இன்னுமின்னும்
பண்டங்கள் அமுத சுரபியாகிறது.
ஆயிரம் மைல் கடந்தும்
அம்மாளைத் தரிசிக்க
சிற்றிபாங்கில் கடனெடுத்தும்
செய்வோம் நேத்திகள்
ஏனென்றால் சாமிக்கெல்லோ
செய்கிறோம் நேத்தி.
ஏன்.....?
கேட்டால் கடவுளைச் சாட்டு....
கொலைநடக்கிறது மண்ணில் - என்
மதம் சொல்கிறது....
உயிர் கொல்ல நீ உதவாதே....!
ஊருக்கு உதவினால் - என்னை
ஆண்டவர் தண்டிப்பார்.
ஆனாலும் இலக்கியம் படைப்போம்
கொலையென்று சொல்லும் தியாகங்களை
கொலுவைத்து வணங்கச் சொல்லி.
'ஊர் திண்டாப் பேர் உறவு திண்டா புற்று"
அட அதுகூட இல்லை.
சாமியின் பேர் சொல்லி
நம்மைச் சுரண்டும்
உண்டியல்கள் உருப்பெருக்க
யாரையோவெல்லாம்
அம்மனென்றும் ää முருகனென்றும்
ஆண்டவராய் வரித்து
பாவங்களைச் சேர்ப்போம்
இதுவே எங்களின் சாபங்களாகிறது.
29.04.03.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

