03-14-2005, 04:56 PM
எனது நண்பன் ஒருவன் அண்மையில் தனது தாயரின் இறப்பு செய்டி அறிந்து. நாட்டிற்கு சென்றான். அவனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அன்னால் அங்கு இருக்கும் இவனது உற்றார் உறவுகளோ கடவுள் நம்பிக்கையில் மூழ்கித்திளைத்தவர்கள். அந்த தாய்க்கு எனது நண்பன் கடைசி பிள்ளையாம். இவனும் நாட்டில் இருந்த பொழுது கோவில் தொண்டுகள் செய்தானாம். வெளிநாடு வந்து கடவுளின் பெயரால் நடக்கும் கொடுமைகளைக் கண்டு, கடவுள்மறுப்பு கொள்கைதனைக் கொண்டான். இவன் கடைசி பிள்ளை ஆகையால், தாயருக்கு இவனே கொள்ளி வைத்திடல் வேண்டும் என ஒரு முறை அவனது ஊரில் உண்டு. அவன் மனதுக்கு தாயாருக்கு நெருப்பி இடும் சம்பவமானது பெரும் சங்கடத்தினை கொடுத்ததுவாம். அங்கே ஒரு ஐயர் வரவளைக்கப்பட்டு பல சமஸிருத மந்திரங்கள் ஓதப்பட்டனவாம். இவனும் தான் செய்ய வேண்டிய கருமங்களை செய்தானாம்.
இவனுக்கு இப்போது இரண்டு விடயங்கள் பிரைச்ச்சினையாக இருக்கின்றன. ஒன்று தாயாரின் இறப்பு.
மற்றயது சமஸ்கிருத மந்திரம் இவன் இவற்றுள் எதனை தவிர்த்து இருக்க வேண்டும்?
இவன் தாயாரின் உயிரற்ற உடலுக்கு நெருப்பு இடுவதனை தவிர்த்திருக்க வேண்டுமா?
இல்லை இரண்டையும் அந்த சூள்னிலை கருதி அவன் உறவுகளின் உணர்வுகளிற்கு மதிப்பளித்து இவை இரண்டினையும் அவன் கட்டாயம் செய்திருத்தல் வேண்டுமா? அதாவது சமஸ்கிருத மந்திரம் ஓதப்பட்டு பின் அவனை அன்பாக வளத்த தாயாரின் உயிரற்ற உடலுக்கு தீ இடுவதனை.
மற்றவர்களின் நம்பிக்கை களில் குறுக்கிடும் இவன் தனது தாயின் விடயத்தில் நடந்துகொண்டது சரியா?