03-14-2005, 12:05 PM
இந்தியாவில் அந்தக் காலத்தில் ஒவ்வொரு கிராமங்களையும் கொள்ளைக்காரர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக எல்லை காக்கும் காவலாளி (எல்லைக்காவலன்) இருந்து வந்திருக்கிறார்கள். (பல படங்கள் சாட்சி) வாழ்க்கை முழுவதும் கிராமங்களுக்காக வாழ்ந்து அப் பணியில் தங்கள் உயிரையும் கொடுத்தவர்கள் அங்கு தெய்வமாக்கப்பட்டிருக்கிறார்கள்.(பெரிய கருப்பண்ண சாமி சின்ன கருப்பண்ண சாமி சில உதாரணங்கள்) இதைவிட மதுரை வீரன் சாமியாக வணங்கப்படும் சாதாரண போர்வீரன். இவனுக்கும் இரு மனைவியர். ஒருவன் கஸ்டப்படும்போது நீங்கள் உதவி செய்தால் ஐயா சாமி என்று காலில் விழுந்து நன்றி தெரிவிக்கும் நாடு அது. இதைப் பற்றி தமிழ்நாட்டு நண்பர்கள் விளக்கம் அளிப்பதுதான் சரியாக இருக்கும்.
!

