03-14-2005, 04:56 AM
Sriramanan Wrote:யார் இந்த முருகன்?
வேலன். வேல் கொண்டு பகையழித்த வீரத் தமிழ்ப் பெருந் தலைவன். தமிழர்களின் காவலன். அப்போதைய பிரபாகரன்.
இவனிற்கு முருகன், சண்முகன், பழனி (இன்னும் பல) என்ற பெயர்கள் கிடையாது. வள்ளி தெய்வானை ஆகிய மனைவிகள் கிடையாது. இவன் பிள்ளையார் என்ற யானையின் தம்பி இல்லை. சிவன் என்ற கற்பனைக் கடவுளின் நெற்றிக் கண்ணால் பிறந்தவன் இல்லை.(தமிழ்த் தாயொருத்தி 10 மாதங்கள் சுமந்தே இவனை ஈன்றெடுத்தாள்) ஆறு தலைகள் கிடையாது. பன்னிரண்டு கைகள் கிடையாது.
தமிழர்களின் உள்ளங்களில் கதாநாயகனாக வாழ்ந்த தலைவன் வேலனை வேறுவழியின்றி இந்துமதம் என்ற சாக்கடையைத் தமிழர்களிடம் திணித்த ஆரியர்களினால் தமிழர்களுக்கு மாத்திரம் கடவுளாக்கப்பட்டவன். தமிழ்க் கடவுள் என்பதற்காக இரு மனைவிகள் கொடுத்து அசிங்கப்படுத்தப்பட்டவன்.

