Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறுவர் கதை
#1
சிறுவர் கதை

அவலபுரத்து மன்னன் மிகவும் பவசாலியும் வீரனும் ஆவான். அவனை சுற்றியுள்ள அனைவரும் தினமும் அவனை புகழ்ந்து கூறி மன்னனின் பாராட்டையும் பரிசையும் பெற்றுச் சென்றனர். ஓரு நாள் மன்னன் நகர் வலம் சென்றார் மன்னன் மிகவும் ஆடம்பரமான ஆடையை அணிந்தான். தன் மந்திரி பிரதானிகளிடம் தன் ஆடை அலங்காரம் குறித்து வினாவ அனைவுரும் ஆகா அற்புதம் ஆகா அழகோ அழகு என
பாராட்டவும் மன்னனும் மகிழ்வுடன் அனைவருக்கும் பரிசளித்து நகர் வலம் சென்றார்.
மக்களும் மன்னனை வணங்கிச் சென்றனர். மன்னர் அப்பால் சென்றதும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். அக் கூட்டத்தில் இருந்த சிறுவன் ஒருவன் மன்னனை கண்டு பரிகாசம் செய்து கை கொட்டிச் சிரித்தான். ஆத்திரம் அடைந்த மன்னன் சிறுவனை பிடித்து என்னில் என்ன குறை கண்டாய் என ஆத்திரத்துடன் வினாவினான் ?
அச்சிறுவனும் பணிவுடன் மன்னனிடம் கூறினான்
மாமன்னாää தங்களின் பட்டுப் பீதாம்பரத்தில் பெரிய கிழிசல் உள்ளது. அது உங்களை அரை நிர்வாணமாக காட்டுகிறது. என்றான். மன்னா தங்களை புகழ்ந்து பரிசு பெற்றவர்கள் தங்களின் ஆடையில் இருந்த குறையையும் கூறியிருந்தால் நீங்கள் இவ்வாறு அவமானப்பட வேண்டியிருக்காது என்று கூறினான். ஆத்திரமும் அவமானமும் அடைந்த மன்னன் அன்று முதல் தன்னை வாழ்த்துபவர்களிற்கு பரிசளிப்பதை நிறுத்திää தன் குறைகளை கண்டு விமர்சிப்பவர்ளை மகிழ்வுடன் வரவேற்று தன் ஆட்சியில் உள்ள குறைகளை களைந்து நீதியான நல்லாட்சி செய்தான் .


முகமன் கூறும் நண்பனை விட உன்; குறைகளை துணிவுடன எடுத்துரைப்பவனே உன்னில் மிக அக்கறையாக உள்ளான்

தலைப்பு சீர்செய்யப்பட்டுள்ளது --யாழினி
Reply


Messages In This Thread
சிறுவர் கதை - by VERNON - 03-13-2005, 09:42 PM
[No subject] - by yalie - 03-14-2005, 02:05 AM
[No subject] - by kavithan - 03-14-2005, 03:56 AM
[No subject] - by yalini - 03-14-2005, 03:56 PM
[No subject] - by தூயா - 04-18-2005, 04:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)