03-13-2005, 07:41 PM
tamilini Wrote:Quote:கற்பனையில இருக்கு...நிஜத்தில இப்படி எல்லாம் பெண்களக் காணவா முடியும்...அதுவும் தமிழ் பெண்களை...!ம் இதை உங்க வாயால வரவேணும் என்று தான் பாத்தம்.. முன்னால் மனம் கவர்ந்தவரை கலியாணம் ஆனபின்னும் என்னவள் என்பியல்.. அவங்களும் ஓம் சரிங்க.. என்று சொல்லுவாங்களா..?? இதென்ன காவிய நாயகியரா.. கணவனை கூடையில சுமந்து.. கொண்டு போக.. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மனிதாபிமானமுள்ள எந்தப் பெண்ணும் அல்லது ஆணும் ஒருவருக்கு துன்பம் வந்தால் மற்றவருக்கு உதவுதல் என்பது மனிதனுக்கான இயல்பு...அது காவியம் தொடக்கம் கலிகாலம் வரை அவசியம்...!
இல்ல... மனிதாபிமானம் உள்ள மனிதன் என்ற அந்த நிலையை இழந்து விலங்கிலும் கேடான ஒரு நிலையை அடைய வேண்டியதுதான்...!
அண்மையில் ஒரு இடத்தில ஒரு சோடிப் புறாக்கள் பாத்தம்...ஒன்றிற்கு ஒரு கால் பாதத்தோட இல்ல...அவை உணவருந்தி விட்டு இறகு உலர்ந்திக் கொண்டிருக்க...காலுள்ள சோடிப் புறா மற்றதுக்கு அதன் தலை இறகுகள் உலர்த்தி விடுவதைப் பார்த்தம்...கண்ணால கண்டம்...மனிதரிடம் கூட அருகிவிட்ட அல்லது இல்லாத அந்தப் பண்பபை...புறாக்களிடம் கண்டது வியக்க வைத்தது....! சீன நண்பர் ஒருவர் அதைப் படம் பிடித்தும் கொண்டார்...! அதுகள் என்ன கலிகாலம் என்று புரட்சி என்று கண்மூடித்தனமாக தங்கள் உதவி செய்யும் குணத்தை கூட கூடை இறக்கியா வைத்துவிட்டன.....இல்லவே இல்லை...! அதுபோலத்தான் ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ மனத்தால் காயப்பட்டு வருந்தும் போது அவரைத் தேற்ற வேண்டியது மனித இயல்பு....அதை நாம் செய்வோம்...உண்மையில் இப்படி ஒரு சூழ்நிலை எமக்கு வந்தால் கூட...ஆனால் அப்படி ஒரு நிலை வரக்கூடாது யாருக்கும் என்பதாகவே எங்கள் செயற்பாடு முன்னிலைப்படுத்தப்படும்...வருமுன் காத்தல்...!
மனிதாபிமானத்தின் முன் கணவன் மனைவி...பிள்ளை குட்டி என்பதற்கு மேல் மனிதன் என்ற சிந்தனையே அவசியம்...அங்கு வீர வசனம் பேச வெளிக்கிட்டால்...அது அவர்கள் தங்களைத் தாங்களே குணத்தால் தாழ்த்துவதாகத்தான் முடியும்...! இதுதான் எங்கள் கவிதை சொல்ல வந்த சாரமும் கூட...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->